முதல்வர் சப்போர்ட் இருந்தும் ஈஸ்வரப்பா ராஜினாமா.. கர்நாடகாவில் நடந்தது என்ன? பரபர பின்னணி
பெங்களூர்: காண்ட்ராக்டர் தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று மாலையில் பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய உள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆதரவு இருந்தும் அவர் நேற்று திடீரென்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததன் பின்னணி விவரங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா உள்ளார்.
இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டம் இண்டல்காவை சேர்ந்த காண்ட்ராக்டர் சந்தோஷ் கே பட்டீல் சில நாட்களுக்கு முன்பு உடுப்பி விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு
தற்கொலைக்கு முன்பாக சந்தோஷ் கே பட்டீல் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது கமிஷன் குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதாவது ஒப்பந்த அடிப்படையில் முடித்த அரசு பணிகளுக்கான நிலுவை தொகையை வழங்க ஈஸ்வரப்பா 40 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக அவர் தெரிவித்து இருந்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சந்தோஷ் பட்டீல் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தோஷ் கே பட்டீலை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஈஸ்வரப்பா ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
இதையடுத்து ஈஸ்வரப்பாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தவைர்கள் பெங்களூர் ராஜ்பவனில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து கடிதம் கொடுத்தனர். மேலும் ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களின்போது அவர்கள் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

ஈஸ்வரப்பாவுக்கு முதல்வர் ஆதரவு
இருப்பினும் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். இதுபற்றி நேற்று மதியம் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போதும், ‛‛ஈஸ்வரப்பா விவகாரத்தில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. கட்சி மேலிடத்துக்கு இதற்கும் சம்பந்தம் கிடையாது. வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை வரட்டும் பார்க்கலாம்'' என்றார். இதன்மூலம் ஈஸ்வரப்பா அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டார் என பசவராஜ் பொம்மை கூறினார். ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் ஈஸ்வரப்பா நிருபர்களை சந்தித்து அமைச்சர் பதவியை ராஜினமா செய்வதாகவும், இதற்கான கடிதத்தை நாளை (அதாவது இன்று) மாலை முதல்வரிடம் வழங்குவேன்'' எனவும் தெரிவித்தார்.

நடந்தது என்ன
ஈஸ்வரப்பாவை அமைச்சரைவில் இருந்து நீக்க முடியாது என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறிய நிலையில் அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தது முரண்பாடாக உள்ளது. இதன் பின்னணியிலும் சில விஷயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு தான் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

லிங்காயத் - குருபா சமுதாயம்
மேலும் கர்நாடகத்தில் பாஜகவின் அரசியல் என்பது லிங்காயத் சமுதாயத்தை மையப்படுத்தி தான் உள்ளது. இதனால் தான் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா முதல்வராக செயல்பட்டார். அவருக்கு பிறகு அதே சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். கமிஷன் குற்றச்சாட்டு உள்ளான ஈஸ்வரப்பா குருபா(ஆடு வளர்க்கும் மக்கள்) சமுதாயத்தை சேர்ந்தவர். அடுத்தாண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் பெற்ற ஈஸ்வரப்பா மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என சில லிங்காயத் தலைவர்கள் கட்சி மேலிட தலைவர்களிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசியல் லாபத்தை தடுக்க
மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் குருபா சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் குருபர் சமுதாயத்தின் ஓட்டு வங்கி எப்போதும் சித்தராமையா உள்ள காங்கிரசுக்கு தான் கிடைக்கிறது. எனவே ஈஸ்வரப்பாவை நீக்கி ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான கட்சி எனக்கூறி பிற சமுதாய மக்களின் ஓட்டுக்களையாவது நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஈஸ்வரப்பா மீதான குற்றச்சாட்டை பயன்படுத்தி காங்கிரஸ் வரும் தேர்தலில் அரசியல் லாபம் அடைந்து விடும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரிடம் கூறவில்லை
மேலும் இதை அவர்கள் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் சொல்லவில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் இருந்தார். தற்போது ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் பாஜகவுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச குருபர் சமுதாய மக்களின் ஆதரவும் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் கிடைக்காமல் போய்விடும் என பசவராஜ் பொம்மை அஞ்சி தான் அவசரம் காட்டாமல் இருந்தார். ஆனால் சில லிங்காயத் தலைவர்கள் தான் ஈஸ்வரப்பாவை அமைச்சரைவில் இருந்து கழற்றிவிட முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications