For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி... குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையா இருக்கே!

ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தாக்கல் செய்த கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரிக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்திற்கும், இறுதியாக தாக்கல் செய்த படிவத்திற்கும் 84 சதவிகிதம் படிவங்கள் சுத்தமாக..

Google Oneindia Tamil News

டெல்லி: வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தாக்கல் செய்த கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரிக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்திற்கும், இறுதியாக தாக்கல் செய்த படிவத்திற்கும் 84 சதவிகிதம் படிவங்கள் சுத்தமாக பொருந்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

2017ம் ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி செலுத்துவதற்கான படிவங்கள் அனைத்தும் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில்தான் முழு வடிவம் தரப்பட்டு ஜிஎஸ்டி இணையதளத்திள் அனைவருக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டிஆர் படிவங்கள் அனைத்தும் ஆகஸ்டு மாத இறுதி முதல் பயன்பாட்டிற்கு விடப்பட்டாலும், ஜிஎஸ்டிஆர் படிவங்களை வர்த்தகர்களும் தொழில் துறையினரும் பயன்படுத்துவதற்கு சிரமப்பட்டனர். ஜிஎஸ்டிஆர் படிவங்கள் அனைத்தும் வாட் வரி விதிப்பு முறையில் இருந்த படிவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுவிதமாக இருந்ததால் அனைவரும் குழம்பிப் போயினர்.

ஜிஎஸ்டிஆர் படிவங்கள்

ஜிஎஸ்டிஆர் படிவங்கள்

ஜிஎஸ்டிஆர் படிவங்கள் அனைத்தும் புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருந்தாலும் கூட வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஆர்வ மிகுதியில் அனைவரும் குருட்டுப்பூனை இருட்டு அறையில் விட்டத்தில் பாய்ந்தது போல, போட்டி போட்டுக்கொண்டு தங்களின் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றம் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்தனர்.

மாதாந்திர ஜிஎஸ்டிஆர்

மாதாந்திர ஜிஎஸ்டிஆர்

வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்யத் தொடங்கியதால், ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருவாய் கூடிக்கொண்டே போனது. ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 93,590 கோடி ரூபாயும், ஆகஸ்டு மாதத்தில் 93,029 கோடி ரூபாயும், செப்டம்பர் மாத வருவாய் 95,132 கோடி ரூபாயும் வசூலானது.

ஜிஎஸ்டி வரி வருவாய்

ஜிஎஸ்டி வரி வருவாய்

மாதாந்திர ஜிஎஸ்டிபடிவங்களை அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஓரளவு புரிந்துகொண்டதால், பின்னர் வந்த மாதங்களில் சுதாரித்துக்கொண்டு தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்ததால், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 85,931 கோடி ரூபாயும், நவம்பர் மாதத்தில் 83,716 கோடி ரூபாயும், டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 88,929 கோடி ரூபாயாகவும் சரிந்தது.

மாதந்திர படிவம் தாக்கல்

மாதந்திர படிவம் தாக்கல்

தற்போது ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் தாக்கல் செய்யப்பட்ட மாதாந்திர ஜிஎஸ்டிஆர் தரவுகளை நுணுக்கமாக ஆராய்ந்தபோது சுமார் 34,400 கோடி ரூபாய் அளவிற்கு குறைவாக வரி செலுத்தியது தெரியவந்துள்ளது. இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களின் படி, சுமார் 34 சதவிகித தொழில் துறையினர் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களின் மூலம் செலுத்தி இருக்கவேண்டிய ஜிஎஸ்டி வரி சுமார் 8.50 லட்சம் கோடி ரூபாயாகும். ஆனால், மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-3பிபடிவங்களின் படி செலுத்தியுள்ள ஜிஎஸ்டி வரியானது சுமார் 8.16 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

சுத்தமா பொருந்தலையே

சுத்தமா பொருந்தலையே

ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் தாக்கல் செய்துள்ள பூர்வாங்க ஜிஎஸ்டிஆர் படிவங்களை ஜிஎஸ்டி ஆணையம் ஆராய்ந்தபோது, சுமார் 16.36 சதவிகிதம் படிவங்கள் மட்டுமே இறுதிப் படிவங்களுடன் (Final Return) பொருந்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி அவர்கள் செலுத்தி உள்ள ஜிஎஸ்டி வரியானது சுமார் 22,014 கோடி ரூபாய் மட்டுமே. மீதம் உள்ள படிவங்களுக்கும் இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களுக்கும் சுத்தமாக பொருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ரூ. 6.50 லட்சம் கோடி

ரூ. 6.50 லட்சம் கோடி

ஒட்டுமொத்தமாக, இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களை வருவாய் துறையினர் ஆராய்ந்தபோது, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளவர்கள் சுமார் 51.96 சதவிகிதம் பேர். இவர்களில் சுமார் 49.36 சதவிகிதம் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டிஆர்-1 படிவங்களின்படி அவர்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியானது சுமார் 5.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆனால் இறுதி ஜிஎஸ்டி தரவுகளின்படி அவர்கள் அவர்கள் செலுத்தியுள்ள ஜிஎஸ்டி வரியானது சுமார் 6.50 லட்சம் கோடி ரூபாயாகும்.

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

இந்த குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவரும் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, அனைத்து உறுப்பினர்களுடனும் கடந்த மார்ச் 10ம் தேதி கலந்து பேசினார். இறுதியாக மீண்டும் அனைத்து ஜிஎஸ்டி தரவுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து, அதில் உள்ள குழறுபடிகளை கண்டறிந்து, இறுதி ஜிஎஸ்டிஆர் படிவங்களுக்கும் ஜிஎஸ்டிஆர்-1 விற்பனை படிவங்கள் மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பியின்படி செலுத்திய நிகர வரிக்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஜிஎஸ்டிஆர் 3பி படிவம்

ஜிஎஸ்டிஆர் 3பி படிவம்


இதுபற்றி விளக்கமளித்த அபிஷேக் ஜெய்ன், ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களின் படி செலுத்தவேண்டிய நிகர வரியை கணக்கிடும்போது, கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்களையும் (Purchase & Sales Returns) கணக்கில் எடுத்துக்கொண்டு இறுதியாக ஜிஎஸ்டிஆர்-3பியின் படி செலுத்தவேண்டிய வரியை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்றால் செலுத்தவேண்டிய நிகர வரியை கணக்கிடுவது சிரமமாகும் என்று தெரிவித்தார்.


English summary
As per the analysis by the GST revenue department, initial GSTR filed and taxes paid only 16.36% and balance 83.64% GSTR had been mismatched. The GST council have decided to further detailed analyze the GST Data gaps between self-declared liability as per GSTR-1 with GSTR-3B.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X