For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்லிகை விலை கிடுகிடு உயர்வு

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பூக்கள் வரத்து குறைவால் மல்லிகை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மல்லிகை, பி்ச்சி, கேந்தி, கனகம்பரம், ரோஜா, அரளி, சேவல், காக்கட்டான், கொழுந்து உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்துள்ளனர்.

விளையும் மலர்கள் அனைத்தையும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயில் தெப்பக்குளம் அருகே கொண்டு கோயிலுக்கு வருவோருக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

Jasmine prices go high

தற்போது வழக்கத்தை விட சீசன் முடிந்தும் பனிப்பொழிவு நிற்கவில்லை. இதனால் பூக்கள் விலை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து அடியோடு குறைந்தது. குறிப்பிட்ட அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் அதிக அளவில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய முடியவில்லை. மேலும் ரூ.10க்கு ஒரு விரல் அளவே கொடுக்க முடிந்ததால் பலர் வாங்காமல் சென்றனர். வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ ரூ.1750 ஆக பூவின் விலை தறுமாறாக ஏறியது. மல்லிகையி்ன் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டுள்ளதால் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பூக்களின் கடுமையான விலை உயர்வின் காரணமாக பொதுமக்கள் பலர் விலை குறைந்த பூவான காக்கட்டான், பிச்சி பூக்களை அதிகளவில் வாங்கி சென்றனர்.

English summary
Buyers are upset after Jasmine flower's price has shot up in and around Sankarankovil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X