For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உஷார்.. சேவை வரி உயர்வால் இவற்றின் கட்டணமெல்லாம் எகிறும்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் ஆம்னி பஸ்கள், கால் டாக்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

பட்ஜெட்டில் 12.36%ஆக இருந்த சேவை வரியை 14% ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த சேவை வரி உயர்வு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து ரயில், விமானப் பயணம், வங்கிச் சேவை, காப்பீடு, விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு, சுற்றுலாப் பயணம் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் அதிகரிக்கவுள்ளன.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆகியவை "கூடுதல் சேவை வரி பிடிக்கப்படும்" என்பதை தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அறிவித்துள்ளன.

Service tax hike becomes effective from today

சேவை வரியால் உயரும் கட்டணங்கள்..

  • அதாவது ரயில்களில் முதல் வகுப்பு, ஏசி வகுப்பு, சரக்கு கட்டணங்கள் மீதான சேவை வரி 0.5% உயர்கிறது. இந்த பிரிவில் 3.7% இருந்த வரி 4.2%ஆக உயர்ந்திருப்பதால் ஏசி பெட்டி கட்டணம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயரும்.
  • போக்குவரத்துக்கும் சேவை வரி அமலுக்கு வருவதால் சரக்கு வாகனங்களுக்கான வாடகை உயருகிறது. இதனைத் தொடர்ந்து காய்கறி, உணவுப் பொருட்கள் விலையும் ஏறப் போகிறது. - ஆம்னி பஸ் மற்றும் கால் டாக்சிகளின் கட்டணமும் எகிறும்
  • மொபைல் போன் கட்டணம், தொலைபேசி கட்டணங்களும் உயருகிறது.
  • திருமண மண்டப வாடகை, வணிக வளாகங்களில் வாகனம் நிறுத்தும் கட்டணங்கள் அதிகரிக்கும்.
  • நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப்பொருட்களுக்கான விலை உயரும். இதனால் பில்கள் இனி ஷாக்கடிக்கும்.
  • ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகளுக்கும் சேவை வரி வருவதால் வீடு வாங்குவோர் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.
  • விமான போக்குவரத்து, வங்கி, இன்சூரன்ஸ், விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு சேவைக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது
English summary
The cost of services increase from today as the Service Tax hike from the previous 12.36 percent to 14 percent becomes effective, in accordance to Union Finance Minister Arun Jaitley's Budget proposal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X