அரிய வகை இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்! உயிரை காப்பாற்ற இன்றே உதவுங்கள்
சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஸ்ரீவாரி, தனது வாழ்வில் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து வருகிறான். அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சிறுவன், தனது வாழ்நாளின் கடைசி கட்டத்தில் இருக்கிறான். உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி. எனவே சிறுவனின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன், ஒரு காலத்தில் சிரிப்பும் குதூகலமுமாக வீட்டிற்குள் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

கடந்த மே மாதம் ஸ்ரீவாரிக்கு திடீரென கடுமையான காய்ச்சலும், இடைவிடாத இருமலும் ஏற்பட்டது. பெற்றோர்கள் போகாத கோயில் இல்லை, பார்க்காத சாமியில்லை. ஆனாலும் குழந்தையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேறுவழியின்றி சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் இதய பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில், இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதற்கான சிகிச்சைக்கு MIOT மருத்துவமனையை நாட அறிவுறுத்தப்பட்டது.
சிறுவனுக்கு நடத்தப்பட்ட விரிவான சோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை கூறினார். அதாவது ஸ்ரீவாரிக்கு "கரோனரி கேமரல் ஃபிஸ்டுலா" எனப்படும் அரிய வகை இருதய நோய் உள்ளது. இதனால், இரத்தம் இதயத்திற்குள் இயல்புக்கு மாறாக பாய்ந்து, இதயத்திற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

கரோனரி தமனியில் உள்ள இரத்தம் இதயத் தசைகளுக்கு சென்று, பிறகு அங்கிருந்து நுண்ணிய நாளங்கள் வழியாக இதயத்தின் அறைகளுக்குத் திரும்ப வேண்டும். இதுதான் வழக்கமான இதயத்தின் செயல்பாடு. ஆனால் ஃபிஸ்டுலா இருக்கும்போது, கரோனரி தமனியில் உள்ள ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம், நேரடியாகக் குறுக்கு வழியில் இதய அறைக்குள் பாய்கிறது. இப்படி நடப்பதால் இதயத் தசைகளுக்குத் தேவையான இரத்தம் முழுமையாகக் கிடைக்காமல், இரத்தத்தின் ஒரு பகுதி வீணாகிறது. மட்டுமல்லாது கூடுதல் இரத்தம் இதயத்தின் அறைகளுக்குள் செல்வதால், இதயத்தின் வலது பக்கம் மீது கூடுதல் பளு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை நாளடைவில் தொடர்ந்தால் அது உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம்.
பிரச்சனையை சரி செய்ய, டிரான்ஸ்கேதெட்டர் ஆக்ளூஷன் ஆஃப் தி ஃபிஸ்டுலா யூசிங் எ வாஸ்குலர் பிளக் என்கிற சிகிச்சையை அளிக்க வேண்டும். இது மட்டுமே சிறுவனின் உயிரை காப்பாற்றும். இந்தச் சிகிச்சைக்கு, ஐசியூ பராமரிப்பு, சோதனைகள் மற்றும் மருந்துகள் உட்பட மொத்தம் ₹2,00,000/- செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீவாரியின் தந்தை ஒரு விவசாய கூலி தொழிலாளி. அவரது வருமானம் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இவ்வளவு பெரிய தொகையை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
மற்ற தந்தைகளைப் போலவே, தனது மகனும் மீண்டும் ஆரோக்கியமாக, சிரித்து விளையாடி வளர வேண்டும் என்பதே அவரது ஒரே ஆசை. ஆனால், இன்று கண்கள் கலங்க, தனது மகனின் போராட்டத்தைப் பார்த்து நிற்கிறார். ஏனெனில், சிகிச்சை இருக்கும்போதிலும், அதற்கான செலவை அவரால் ஏற்க முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், உங்களது கருணையும் ஆதரவும் ஸ்ரீவாரிக்கு நம்பிக்கை அளிக்கும். உங்களின் சிறிய உதவி கூட இந்த எளிய குடும்பத்திற்குப் பெரும் பலமாக அமையும். ஸ்ரீவாரி ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வைப் பெற நாம் அனைவரும் இணைந்து உதவலாம்.
நீங்கள் செய்யும் உதவி வெறுமென மருத்துவம் சார்ந்தது மட்டுமல்ல, ஒரு குழந்தையின் எதிர்காலத்தையும், மனிதநேயத்தின் மீதான ஒரு தந்தையின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க நீங்கள் உதவுகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான்












Click it and Unblock the Notifications