“அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்க”.. முதல்வர் ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்!
சென்னை: "பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.
திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என ஜாக்டோ ஜியோ சார்பில் TAPS ஓய்வூதிய முறையை அமல்படுத்திய முதல்வருக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சரின் மு க ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "அரசு ஊழியர்களுக்காக கலைஞர் செய்த சாதனைகள், சீர்திருத்தங்களை சொல்ல ஒரு மாநாடு போதாது. அரசியல்வாதிகள் கொள்கைப் பிடிப்போடு செய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போர் அரசு ஊழியர்கள் தான். ஆசிரியர்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சிறந்து விளங்குகிறது.
ஆசிரியர்களின் பணியால் கல்வியில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு. நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள். அரசு ஊழியர்களின் கண்ணீர் துளிகளை துடைக்கவே கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான் தற்போது உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். TAPS திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு கருணை ஓய்வூதியம், 'உழைப்புக்கான உரிமைத் தொகை' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று கூறினார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. ,அத்திய அரசு வரிப் பகிர்வை குறைத்தாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.
"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள், நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேறும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications