அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்
சென்னை: அதிமுகவின் கோட்டைகளான உதகை, அவிநாசி உள்ளிட்ட அதிமுகவின் கோட்டையை பாஜகவுக்கும் இதர கூட்டணி கட்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி தாரை வார்த்து கொடுத்ததற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
மேற்கண்ட தொகுதிகளில் உதகை, அவிநாசி, குளச்சல், விளவங்கோடு, நாகர்கோவில், பத்மநாபபுரம் உள்ளிட்ட தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளில் ஒன்றில் மட்டும் அதிமுகவும், 4 தொகுதிகளில் பாஜகவும் ஒரு தொகுதியில் தமாகாவும் போட்டியிடுகிறது.
இது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது போல் அவிநாசி தொகுதி அதிமுகவின் கோட்டை. இங்கு முன்னாள் சபாநாயகர் தனபால் போட்டியிட்டு வென்றார். தற்போது அவர் எம்எல்ஏவாக இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு பதில் அவரது மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் தனக்கு வழங்குமாறு அதிமுக தலைமையிடம் கேட்டிருந்தார்.
ஆனால் லோகேஷுக்கு சீட் வழங்கப்படாது என்பதை அறிந்த அவர், தவெகவில் இணைந்துவிட்டார். அந்த அவிநாசியை கேட்டுப் பெற அதிமுகவினர் போட்டி போட்ட நிலையில் தற்போது அந்த தொகுதி பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.
அது போல் கன்னியாகுமரி அதிமுகவினரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் ஜெயிக்க விடமாட்டோம் என தெரிவித்தனர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக எப்படி வெல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாக மேற்கண்ட தொகுதிகளில் உழைத்த அதிமுக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கூட்டணித் தர்மத்திற்காகத் தொகுதியை விட்டுக் கொடுத்தது அவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு எளிதாக மாறிவிடும், ஆனால் பாஜகவின் வாக்குகள் தங்களுக்கு வருமா? என்ற சந்தேகம் சில அதிமுக தொண்டர்களிடையே நிலவுகிறது.
திராவிட அரசியலின் கோட்டையில் தேசியக் கட்சியின் ஆதிக்கம் அதிகரிப்பது, கட்சியின் தனித்துவத்தைப் பாதிக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். தற்போது வரை 27 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மற்ற தொகுதிகள் குறித்து பட்டியல் வெளியானால்தான் எத்தனை எதிர்ப்பு கிளம்புமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications