ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலையில் அதிமுக வெல்லும்..கூட்டணி வியூகம்..ஜி.கே.வாசன் நம்பிக்கை
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுக இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக பல இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நிறைய வெற்றிகளும் பெற்றிருக்கிறது. அதிமுகவின் வியூகம் வெற்றி வியூகம் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். வென்றே ஆக வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்துள்ளது திமுக. இதற்காக 11 அமைச்சர்கள் கொண்டு பெரும்படையை களமிறக்கியுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும் கூட்டணி தர்மத்திற்காக இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
இந்த நிலையில் திமுகவை தோற்கடிக்க வலிமையான அதிமுகவினால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார் ஜி.கே.வாசன். எனவேதான் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவிற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். ஜி.கே. வாசன். செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் அதற்கான வெற்றி வியூகத்தை அதிமுக வகுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன். அப்போது அவரிடம் அதிமுக பிளவுபட்டிருப்பது, இபிஎஸ் அணியினர், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தது, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன்,கூட்டணியில் அதிமுக தான் பிரதான கட்சி. அந்தக் கட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்து ஒரு வியூகம் வகுத்துள்ளது. அதுபற்றியே ஆலோசித்தோம். அதிமுக இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதிமுக பல இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நிறைய வெற்றிகளும் பெற்றிருக்கிறது. அதிமுகவின் வியூகம் வெற்றி வியூகம்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் அரசியலில் எப்போதும் நல்லதையே நினைக்கிறேன். அதனால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று அந்த நம்பிக்கையில்தான் கூறுகிறேன். மேலும், திமுக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் அதிமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஜி.கே.வாசன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications