Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ட்விஸ்ட்! செய்தியாளர்களின் கன்னத்தை தட்டிக் கொடுத்து பாசத்தைப் பொழிந்த அண்ணாமலை.. அடடே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பத்திரிகையாளர்களை 'குரங்கு மாதிரி ஏன் தாவுறீங்க' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் பேசிய நிலையில், தற்போது பத்திரிகையாளர்களிடம் 'பாதுகாப்பா இருங்க.. மழையில் நனையாதீங்க' என பாசத்தோடு பேசியது கவனத்திற்குள்ளாகி உள்ளது.

சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை "மரத்துக்கு மரம் தாவும் குரங்குகளைப் போல் ஏன் தாவித்தாவி வருகிறீர்கள்" எனக் கேட்டார் அண்ணாமலை. இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

அண்ணாமலை தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், நான் தவறாகப் பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார் அண்ணாமலை.

மன்னிப்பு கேட்க மாட்டேன் என மறுத்த நிலையில் தான், பருவமழை காலத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களிடம் அக்கறையாக அட்வைஸ் கூறியுள்ளார் அண்ணாமலை.

 பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக

பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக

கடலூரில் சமீபத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் "மரத்தில் தாவும் குரங்குகளைப் போல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்" என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் அவருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும் என்றும் சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்காத அண்ணாமலை

மன்னிப்பு கேட்காத அண்ணாமலை

பிறகு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேறொரு சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் கடலூரில் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அண்ணாமலை.

கோபம் இருக்கு

கோபம் இருக்கு

அப்போது பேசிய அண்ணாமலை, "பத்திரிகையாளர்களை மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீதம் நடத்துகின்றவன் நான். எங்களுக்கு நியாயமான கோபம், சில பத்திரிகையாளர்கள் மீது இருக்கிறது. அவர்கள் தவறான செய்திகளை பதிவிடுவதுதான் அதற்கு காரணம். எனவே, நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான் எப்போதும் தவறு செய்யவில்லை.

ரத்தத்திலேயே கிடையாது

ரத்தத்திலேயே கிடையாது

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் ரத்தத்தில் அது கிடையாது. தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்? அதன்பிறகு, எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். நான் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக நீங்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.

 அக்கறையாகப் பேசிய அண்ணாமலை

அக்கறையாகப் பேசிய அண்ணாமலை

இதனால் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் சென்னை தாம்பரத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அண்ணாமலை, அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அக்கறையாகப் பேசினார். "சேஃபா இருங்க.. மழையில எங்கயும் நனையாதீங்க.." என பத்திரிகையாளர்களிடம் கூறினார். செய்தியாளர் ஒருவரின் கன்னத்திலும் பாசமாக தட்டிக் கொடுத்தார். அருகில் நின்ற கட்சி நிர்வாகியிடம், 'பிரஸ் எல்லா பக்கமும் போறாங்க.. அதனால்தான்' என தனது அக்கறைக்கான காரணத்தையும் வெளிப்படுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+