சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி படத்தையே காணோமே.. கேள்வி கேட்ட செய்தியாளர்.. ஒரே பதிலில் வாயடைக்க வைத்த குஷ்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதிக்கென சிறப்புதேர்தல் அறிக்கை பாஜக வேட்பாளர் குஷ்பு வெளியிட்டு பேசினார். அப்போது மோடி படமே உங்கள் கட்சிக்காரர்கள் பயன்படுத்தவில்லையே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த குஷ்பு, இதோ பாருங்கள். மோடி படங்கள் இருக்கா இல்லை என்று கூறி போஸ்டரை காண்பித்து செய்தியாளரை வாயடைக்க வைத்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது என்று பார்த்தீர்கள் என்றால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஏன் கொடுத்தோம் என்றால்,இன்றைக்கு பெண் குழந்தை பிறந்தால் மிகப்பெரிய பாரமாக நினைச்சுகிட்டு இருக்காங்க

அந்த பாரத்தைஎப்படி சுமப்பது என்று யோசிப்பாங்க.. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தை பிறந்தால், அந்த பெண் குழந்தை பெயரில் நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் நாங்கள் கொடுப்போம். படிக்க வைக்க அந்த தொகை உதவும் என்றார்.

தவறு இல்லை

தவறு இல்லை

அப்போது செய்தியாளர்கள் குஷ்புவிடம், நடிகர் சத்யராஜ் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளாரே என்று கேட்டனர். அதற்கு குஷபு, "ஜனநாயக நாட்டில், யாரும், யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தரலாம், தப்பே இல்லையே" என்றார்.

அதிமுக தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கை

அப்போது செய்தியாளர் ஒருவர் அதிமுக தேர்தல் அறிக்கை மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு கேள்வி கேட்டார். தேசிய கல்வி கொள்கை குறித்தும் கேள்வி கேட்டார். அதற்கு குஷ்பு, எங்கள் தேர்தல் அற்ககையை முழுமையாக படியுங்கள். எல்லாமே முழுமையாக இருக்கிறது. எங்களை திமுக என்று நினைத்துவிட்டீர்களா? நாங்கள் இங்கு அதிமுக கூட்டணியில் நிற்கிறோம். எனவே அதைபற்றிதான் நிறையே பேசுவோம். பாஜகவின் தேர்தல் அறிக்கை என்றுபார்த்தால், வெறும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இருக்கிறது. மத்திய அரசு 60சதவீதம் நிதியுதவி கொடுப்பதால் தான் திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது என்றார்.

மாற்றி போட்டிருக்கலாம்

மாற்றி போட்டிருக்கலாம்

தமிழகத்தில் தாமரை மலரும் என்ற விளம்பரத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மருமகள் படம் போடப்பட்டுள்ளது என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு குஷ்பு, சின்ன தவறு நடந்திருக்கும். வேறு யாராவது படம்போடுவதற்கு பதிலாக மாற்றி போட்டிருக்கலாம். திமுக சார்பிலும் இதுபோன்ற பல தவறுகள் நடத்திருக்கிறது. நேற்று இரவு வந்தது. வந்த உடனேயே நீக்கிவிட்டோம்.

ஆட்சேபனை

ஆட்சேபனை

ஸ்ரீநிதி சிதம்பரத்தை நாங்கள் கலை ரீதியாக பார்க்கிறோம். கலை எந்த கட்சியும் சார்ந்தது கிடையாது. அவர் அழகான சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பதால் அதை பயன்படுத்தினோம் அவருக்கு அதில் ஆட்சேபனை இருந்தது.நாங்கள் உடனே எடுத்துவிட்டோம் என்றார்.,

மோடி படம் இருக்கிறது

மோடி படம் இருக்கிறது

பாஜகவின் பெரும்பாலான போஸ்டர்களில் மோடி படங்கள் இருப்பது இல்லை.ஜெயலலிதா மற்றும் ஓபிஎஸ்,இபிஎஸ் படங்கள் இருக்கிறது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த குஷ்பு, தம்பி நீங்கள், ஒரு பக்கம் பார்ப்பது இல்லை என்று நினைக்கிறேன். இடது பக்கம், வலதுபக்கம் இரண்டு பக்கமே பாருங்கள் இருக்கும். இதோ பாருங்க.. எல்லா போஸ்டரிலும் இருக்கு தம்பி( போஸ்டரை எடுத்து காண்பிக்கிறார்) என்றார்.

English summary
thousand light constituency, bjp candidate Khushbu said we use modi image in our posters. we speak about aiadmk allaince because we allaince with aiadmk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X