Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே.. ‘அபூர்வம்’ - கட்சியை விட்டு நீக்கினாலும் மனசு விட்டு.. சரவணனுக்கு அண்ணாமலை அனுப்பிய மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணனுக்கு குறுஞ்செய்தி மூலமாக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் - மதுரை சரவணன்

    பாஜகவில் இருந்தவரை கட்சிப் பணிகளை மிகவும் சிறப்பாக செய்தவர் சரவணன். அவர் எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளேன் என மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் அண்ணாமலை.

    மதுரையில் பாஜக சார்பில் பல்வேறு கூட்டங்களை நடத்தி கட்சிக்காக உழைத்த டாக்டர் சரவணன், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், அவரது பணிகளை அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

    டாக்டர் சரவணன், தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த நிலையில், அவருக்கு வாழ்த்துக் கூறி அண்ணாமலை மெசேஜ் செய்த சம்பவம் அரசியலில் அபூர்வம்தான்.

    வருத்தம் தெரிவித்த சரவணன்

    வருத்தம் தெரிவித்த சரவணன்

    காஷ்மீரில் வீரமரணமடைந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று செருப்பு வீசினர். இந்தச் சம்பவம் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நேற்று நள்ளிரவு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.

     கட்சியில் இருந்து நீக்கம்

    கட்சியில் இருந்து நீக்கம்

    அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டாக்டர் சரவணன், பாஜக மதவெறி அரசியலில் ஈடுபடுவதாகவும், தனக்கு அது ஒத்துவராததால் நாளை காலை பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும், தாய் வீடான திமுகவில் சேர்வதில் தவறில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சரவணனை கட்சியில் இருந்து நீக்கினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

    கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார்

    கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார்

    மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சரவணன் நடந்து கொண்டதாகவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சரவணனை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நன்றி சொன்ன சரவணன்

    நன்றி சொன்ன சரவணன்

    பாஜகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசிய டாக்டர் சரவணன் "என்னை பாஜகவில் இருந்து நீக்கியதற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி. வன்முறை அரசியல், மத அரசியல் தமிழகத்திற்கு ஒத்துவராது. நேற்று நடந்த சம்பவம் என்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டது. இனியும் இந்தக் கட்சியில் இருக்கக் கூடாது என்றே இந்த முடிவை எடுத்தேன்." எனத் தெரிவித்தார்.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    இந்நிலையில், பாஜக முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், பாஜக மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை "பாஜக ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதில்லை செயல்படப் போவதும் இல்லை. நேற்று மதுரையில் நடந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என கருத்து தெரிவித்ததால் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்." எனத் தெரிவித்துள்ளார்.

    சரவணணுக்கு அண்ணாமலை குறுஞ்செய்தி

    சரவணணுக்கு அண்ணாமலை குறுஞ்செய்தி

    மேலும், "பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணனுக்கு குறுஞ்செய்தி மூலமாக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளேன். அவர் எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளேன். பாஜகவில் இருந்தவரை மதுரையில் கட்சிப் பணிகளை மிகவும் சிறப்பாக செய்தவர். சரவணனுக்கு பதில் மற்றொருவர் அந்தப் பணியில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு வலு சேர்த்த சரவணன்

    பாஜகவுக்கு வலு சேர்த்த சரவணன்

    டாக்டர் சரவணன், பாஜகவில் சேர்ந்த பிறகு திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை பாஜகவில் இணைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக மதுரையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பாஜகவை நோக்கி கவனம் ஈர்த்தார். இந்நிலையில் தான் பாஜகவில் இருந்தவரை கட்சிப் பணிகளை மிகவும் சிறப்பாக செய்தார் சரவணன் என மனம்விட்டுப் பாராட்டியுள்ளார் அண்ணாமலை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+