அரசியல் புரோக்கர் வீட்டில் விருந்து.. வரலாறு மன்னிக்காது.. நடிகர் விஜய் குறித்து பாஜக ஆவேசம்
சென்னை: தமிழக வெற்றி கழகத்தை வெற்றி வியாபார கழகமாக மாற்றி, ரசிகர்களையும், தொண்டர்களையும், கட்சியையும் அடமானம் வைத்து, திமுகவை வெற்றி பெற வைக்கும் வசூல் ராஜாவாக நடிகர் விஜய் மாறிவிட்டார் என்று தமிழ்நாடு பாஜக விமர்சித்துள்ளது. மிஷினரி அரசியல் செய்யும் விஜய், சமூக நீதியை புறக்கணித்து, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு, தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு செய்யும் துரோகத்தை வெற்றியாக கொண்டாடி, அரசியல் புரோக்கர் வீட்டில் விருந்து சாப்பிட்டதை வரலாறு மன்னிக்காது என்று கூறியுள்ளது.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் திமுகவை எதிர்த்தே கடுமையான அரசியலை செய்து வருகிறது. பாஜக குறித்தோ அல்லது அதிமுக குறித்தே பெரிதாக விமர்சனம் செய்வது இல்லை.. திமுக எதிர்ப்பு தான் விஜய்யின் பிரதான கொள்கையாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட அதிமுகவின் கொள்கையாகும்.

இந்த தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய திமுக எதிர்ப்பு ஓட்டுகள் தவெகவிற்கு செல்லும் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. இதனால் இது திமுகவிற்கு சாதகமாக மாறும் ம் என்ற அச்சமும் எதிர்க்கட்சிகளுக்கு வலுவாக உள்ளது. இதனால் விஜய்யை பாஜக மற்றும் அதிமுக தற்போது கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளன.
இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழக வெற்றி கழகத்தை வெற்றி வியாபார கழகமாக மாற்றி, ரசிகர்களையும், தொண்டர்களையும், கட்சியையும் அடமானம் வைத்து, திமுகவை வெற்றி பெற வைக்கும் வசூல் ராஜாவாக மாறிவிட்டார் நடிகர் விஜய்.
இந்நிலையில், தேர்தல் ஆலோசகராக செயல்படும் அனைத்துக் கட்சி அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா வீட்டில் விருந்து சாப்பிட்ட விஜய்யை நினைத்து தவெக தொண்டர்கள் ரத்தம் கொதிக்கின்றனர். திமுக அரசை தட்டி கேட்டு, நடந்த தவறை சுட்டிக்காட்டி நியாயம் கேட்க வேண்டிய விஜய், ஆதவ் அர்ஜுனா இயக்கத்தில் டான்ஸ் ஆடுகிறார்.
அவரின் தேர்தல் வியாபார விருந்தில் தலையாட்டி பொம்மையாய் பங்கேற்கிறார். மக்கள் விரோத திமுக ஆட்சி தோற்றுவிடும், திமுக எனும் தீய சக்தி அழிந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய லாட்டரி பூத அடிமை ஆதவ் அர்ஜுனா மூலம் அரசியல் நடிகர் விஜய்யை பத்து பட சம்பளம் கொடுத்து விலை பேசி விட்டனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில், திமுக, ஆதவ் அர்ஜுனாவிடம் போட்ட ஒப்பந்தப்படி திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற மகிழ்ச்சியை எலக்சன் பார்ட்டி விருந்தாக கொண்டாடி மகிழ்ந்தார் விஜய்.
மிஷினரி அரசியல் செய்யும் விஜய், சமூக நீதியை புறக்கணித்து, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு, தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு செய்யும் துரோகத்தை வெற்றியாக கொண்டாடி, அரசியல் புரோக்கர் வீட்டில் விருந்து சாப்பிட்டதை வரலாறு மன்னிக்காது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications