நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம்
சென்னை: தவெக தலைவர் விஜய் அதிக இடங்களை வென்றால் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்போம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று இந்த பரபரப்பு கருத்தை அவர் முன்வைத்துள்ளார். தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கத் தயார் என்பதே இந்த அறிவிப்பின் பின்னணியாகும்.. இந்த பேச்சால் "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்க, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்திய குடியரசு கட்சியின் (ஆர்பிஐ-ஏ) தேசிய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, கோவை மாநகரில் நடைபெற்ற செய்தியாளளை சந்தித்து பேசினார்.

அப்போது "எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தவெக தலைவர் விஜய் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்கிறார். இப்போது அவரோடு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒருவேளை விஜய் அதிக இடங்களை கைப்பற்றினால், ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால் அவரை நாடுவோம்.
தவெக தலைவர் விஜய்
விஜய் அதிக வாக்குகளை பெறுவார் என்பதால் அவர் திமுகவுக்கு பெரிய சவாலாக இருப்பார். எங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா டாக்டர் அம்பேத்கரின் இந்து வாரிசுரிமை சட்ட கனவை நனவாக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை.
வரும் காலங்களில் தொகுதி மறுவரையறைக்கு பிறகு மக்களவையின் மொத்த இடங்கள் 816 ஆக உயரக்கூடும். அதில் பெண்கள் 273 இடங்களில் அமர்ந்து சாதனை படைப்பார்கள். இந்த இடஒதுக்கீடு 2029 நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கூட்டணியில் 18 இடங்களில் இந்தியக் குடியரசுக் கட்சி "நட்பு ரீதியான" போட்டியில் ஈடுபடும்" என்று தெரிவித்துள்ளார்,
ராமதாஸ் அத்வாலே
இப்போதைக்கு விஜய்யுடன் எந்தவித அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் விஜய்யுடன் கைகோர்க்கத் தயார் என்கிற மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
இதே கருத்தை சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியிலும் அவர் பதிவு செய்திருந்தார்.. தமிழகத்தில் ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலை ஏற்பட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணி விஜய்யுடன் பேசி ஒரு நிலையான ஆட்சியை அமைக்கும் என்று அவர் கூறியிருப்பது, பாஜக தலைமையிலான கூட்டணியின் எதிர்காலத் திட்டத்தையே வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளதால், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சை மிகக் கடுமையாகக் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
பூனைக்குட்டி மெல்ல வந்துருச்சு
ஆரம்பத்திலிருந்தே நடிகர் விஜய், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைத் தீவிரமாக விமர்சிக்காமல் மவுன காத்து வருவதை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், அவர் இக்கட்சிகளின் B-Team ஆகச் செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இப்போது மத்திய அமைச்சரே தாமாக முன்வந்து "விஜய் ஆதரவு கேட்போம்" என்று சொல்வது, திரைமறைவில் ஏதோ ஒரு புரிந்துணர்வு இருப்பதை உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். ஒருவேளை பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியே வருகிறதோ? என்றும் சோஷியல் மீடியாவிலும், அரசியல் மேடைகளிலும் அவர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
ஆனால், தவெக தரப்பை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் மிகவும் உறுதியான ஒரு நிலைப்பாடு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் பாஜக உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும், யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் பக்கம் சாய்கிறாரா
தனித்து நின்று களம் காணத் தயாராகி வரும் வேளையில், மத்திய அமைச்சர் அத்வாலேவின் தொடர்ச்சியான இத்தகைய கருத்துகள் தவெக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமா அல்லது கட்சியின் செல்வாக்கை பாஜக பக்கம் சாய்க்கும் முயற்சியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒருபுறம் விஜய் தனது கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி வரும் நிலையில், மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அவரை நோக்கி நேசக்கரம் நீட்டுவது தமிழக அரசியலை ஒரு சஸ்பென்ஸான கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளது. பூனைக்குட்டி வெளியே வருகிறதா அல்லது இது வெறும் அரசியல் யூகமா? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக!












Click it and Unblock the Notifications