Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் காலை 5 மணிக்கு சுய ஊரடங்கு நிறைவு- மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்தைத் தடுக்க கடைபிடிக்கப்பட்ட மக்கள் சுய ஊரடங்கு காலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது.

Recommended Video

    சுய ஊரடங்கு பற்றி மக்கள் கருத்து | #JANATACURFEW | ONEINDIA TAMIL

    கொரோனாவை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர்.

    Coronavirus: Normalcy returns to TamilNadu after Janata Curfew

    இதனையொட்டி அனைத்து போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக தேசத்தின் இயல்பு வாழ்க்கையை பொதுமக்களே முடக்கிக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணியளவில் பெருநகரங்களில் மட்டும் மக்கள் ஒன்று கூடி, கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால் பெரும்பாலான இடங்களில் இதனை நடைமுறைப்படுத்தவில்லை.

    மேலும் நேற்று இரவு 9 மணியுடன் சுய ஊரடங்கு பல மாநிலங்களில் நிறைவடைந்தது. தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காலை 5 மணிக்கு சுய ஊரடங்கு நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை. எல்லையோரங்களில் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுப்பப்பட்டாலும் அந்த மாநில எல்லைகள் வரைதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மத்திய அரசு சீல் வைக்க உத்தரவிட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+