“என்ன ஜி.. உங்க குருநாதரே இப்படி திணறுறாப்ள..” - பாஜக அண்ணாமலையை வறுத்தெடுக்கும் திமுகவினர்!
சென்னை: 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏற கூட தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தி.மு.க எம்.பிக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பா.ஜ.க தலைவர் சி.டி.ரவி ஆங்கிலம் பேச திணறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தி.மு.கவினரை சீண்டி வருவதால், அவரை சமூக வலைதளங்களில் தி.மு.கவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ‘திராவிட மாயை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏறக்கூட தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது. தமிழக மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர் எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது என விமர்சித்தார்.

திராவிட மாடல்
மேலும், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். திமுகவை வீழ்த்துவது எளிது. தி.மு.கவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் தி.மு.கவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. தி.மு.கவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. தி.மு.க அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள் என்றும் விமர்சித்தார்.

மத்திய அமைச்சர்களுக்கு
அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜ்யசபா எம்.பியும், தி.மு.க வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் செயலாளருமான எம்.எம்.அப்துல்லா, "90% "ஒன்றிய" அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் கூட ஏறத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிதியகங்களிடம் ஒரு பைசா நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது." என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சி.டி.ரவி
மேலும், தி.மு.க வினர் பலரும், ஆங்கிலம் பேசினால்தான் நன்றாக ஆட்சி செய்ய முடியுமா என்றும், பிரதமர் மோடியை டெலி ப்ராம்ப்ட்டர் இல்லாமல் ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள் என்றும் அண்ணாமலைக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
அண்ணாமலைக்கு நெருக்கமான கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய செயலாளரான சி.டி.ரவி ஆங்கிலத்தில் பேச திணறும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தி.மு.கவின் தருமபுரி எம்.பி செந்தில்குமாரும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications