Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியுரிமை சட்டம்- திமுகவினர் போராட்டம்- நகலை கிழித்து எறிந்தார் உதயநிதி- ஆயிரக்கணக்கானோர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் நேற்று இந்த மசோதா சட்டமானது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருண்சலப்பிரதேசம். தற்போது இந்த போராட்டம் தமிழகத்திற்கும் பரவி உள்ளது.

திமுக எப்படி

திமுக எப்படி

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள இந்த மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது. திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. முதலில் சென்னையில் சைதாப்பேட்டை பகுதியில் மட்டும் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கினார்.

அண்ணா சாலை

அண்ணா சாலை

ஆனால் திமுகவின் பலர் கூடியதால், அந்த போராட்டம் அண்ணா சாலை வரை வந்தது. தற்போது திமுகவினர் எல்லோரும் சேர்ந்து சைதாப்பேட்டை முதல் அண்ணா சாலை வரை கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக உதயநிதி கோஷம் எழுப்பி வருகிறார்கள். முக்கியமாக பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் போராட்டம் நடத்த கலைஞர் வளைவு பகுதியில் மட்டுமே போலீசார் அனுமதி வழங்கி இருந்தார்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

இந்த பகுதியை தாண்டி போராட்டம் செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுக்க வேறு இடங்களில் போராட்டம் செய்தவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நகல் எரிப்பு

நகல் எரிப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் பல இடங்களில் குடியுரிமை சட்ட நகல் எரிப்பு போராட்டமும் நடைபெற்றது. குடியுரிமை சட்ட நகலை கிழித்து உதயநிதி உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர். எரிக்கப்பட்ட மசோதாவை திமுகவினர் பின் கொளுத்தினார்கள்.

திமுக போராட்டம்

திமுக போராட்டம்

இதனால் சென்னையில் திமுக போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்திற்கு மக்கள் பலரும் ஆதரவு அளித்தார்கள். இந்த நிலையில் சட்ட நகலை கிழித்த உதயநிதி உள்ளிட்ட முக்கியமான திமுக உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அப்புறப்பபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+