சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நித்தியானந்தா" கைதாகிறாரா.. கோர்ட் அதிரடி உத்தரவு.. ரெடியான போலீஸ்.. ஆனால், இங்கேதான் "இடிக்குதே"

கர்நாடக நீதிமன்றம் நித்தியானந்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நித்யானந்தாவை கைது செய்யும்படி கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த வழக்கில் அங்கேதான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது..!

Recommended Video

    யாருடா இந்த பெண் சாமியார்?! வாழைப்பழம், பஞ்சாமிர்தம் எல்லாம் அமுக்கிவிட்டு அருள்வாக்கு *TamilNadu

    இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் -- அதிலும், தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில் -- அதிலும், உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில் -- அதிலும், உலகமே கைக்குள் அறிவியலாய் அடங்கிவிட்ட நிலையில் -- இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் மட்டுமே நடந்து வருகிறது.

    இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் பதிவாகி இருந்தும், கைலாசா என்ற ஒரு தீவில் இந்த சுவாமி வசித்து வருவதாக சொல்லப்படுகிறது..

    44 வயசு! ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை.. யாரை சொல்கிறார் நித்யானந்தா.. ஏன் என்னாச்சு? 44 வயசு! ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை.. யாரை சொல்கிறார் நித்யானந்தா.. ஏன் என்னாச்சு?

     கோல்டு + டாலர்கள்

    கோல்டு + டாலர்கள்

    அவரை தேடி கைது செய்வதற்குள், கைலாசாவை தனி நாடாகவே அறிவித்துவிட்டார் நித்தியானந்தா.. அதற்கான பணம் மற்றும் அனைத்து சேவைகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, இது தொடர்பாக ஒரு போட்டோ, வீடியோ, அந்த நாட்டு தங்க டாலர் உட்பட எல்லாவற்றையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார்.. யாருக்கெல்லாம் கைலாசா வர விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் தன்னிடம் குடிமக்களாக சேரலாம் என்றும், அப்படி தன் நாட்டுக்கு வந்தால் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதாகவும், கூறியிருந்தார்.

    டீக்கடை

    டீக்கடை


    அதுமட்டுமல்ல, கைலாசாவில் டீ கடை வைத்து பிழைக்க விரும்புபவர்களும்கூட விண்ணப்பிக்கலாம் என்று நித்தி கூறியதை கேட்டு, எத்தனையோ பேர் கைலாசாவுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள்.. இந்தியாவில் இப்படி கஷ்டப்படுவதைவிட, பேசாமல் கைலாசாவுக்கு போய், ஏதாவது வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர்.. இதனிடையே, கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று ஒருவர் நித்தியானந்தாவுக்கு ஸ்டிரைட்டாக லெட்டர்கூட எழுதினார்.. இதை பார்த்து மற்றவர்களும் கைலாசா போக ரெடியானார்கள்..

     அப்ளிகேஷன்

    அப்ளிகேஷன்

    தமிழகத்தில் இருந்து பலர் நித்யானந்தாவிற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.. ஆனால், சிக்கல் என்னவென்றால், இன்னைக்கு வரைக்கும் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. உலக மேப்பில் இன்னும் தேடி கொண்டே இருக்கிறார்கள், ஸ்காட்லாந்துக்கு இணையாக பேசப்படும் நம்முடைய போலீசார்.. இப்போது விஷயம் என்னவென்றால், நித்தியானந்தாவுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இவர்மீது உள்ள ஏகப்பட்ட கேஸில், ஒரு வழக்கு தற்போது ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது..

     பெண் சிஷ்யை

    பெண் சிஷ்யை

    வழக்கம்போல், இதுவும் அவர் மீதான பாலியல் வழக்குதான்.. பிடதி ஆசிரமத்தில், தன்னை நித்யானந்தா பாலியல் தொல்லை தந்ததாக, பெண் சிஷ்யை அளித்த பாலியல் புகார் இது.. பிடதி போலீஸ் ஸ்டேஷனில், புகார் தந்திருந்தார். இந்த வழக்கில் நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்று கோர்ட் பலமுறை உத்தரவிட்டுள்ளது.. ஆனால், அவரும் ஆஜராகாமலேயே இருந்து வருகிறார். இந்த பாலியல் தொல்லை வழக்கானது, மீண்டும் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.. வழக்கம்போல் நித்யானந்தா இந்த முறையும் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

     அட்ரஸ்?

    அட்ரஸ்?

    அதனால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.. அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்23ம் தேதிக்கும் நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.. இப்போது கோர்ட்டே அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்ட நிலையில், நித்தியை எங்கு போய் கைது செய்வது என்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனராம்.. அதனால், பிடதி ஆசிரமத்தின் நிர்வாகத்தின் வழியாக நித்திக்கு பிடிவாரண்ட் உத்தரவு நகலையும் பேலீசார் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.. அப்படின்னா, கைலாசா அட்ரஸ், பிடதி நிர்வாகத்துக்கு தெரியுமோ?!

    English summary
    Does Nithiyananda arrest and karnataka ramanagara court issues non bailable warrant
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X