Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கவாதத்தால் கால்கள் முடக்கமா? மூலையில் முடங்க வேண்டாம்! பக்காவான சிகிச்சை இருக்கு! டாக்டர் தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சூப்பரான சிகிச்சை முறைகள் இருக்கின்றன என அந்த மருத்துவமனையின் கைநுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பக்கவாதத்தால் கால்கள் முடக்கமா? மூலையில் முடங்க வேண்டாம்! பக்காவான சிகிச்சை இருக்கு!

    பொதுவாக ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ நல்ல கொழுப்புகள் குறைந்து கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருந்தாலோ பக்கவாதம் எனும் ஒரு பக்க செயலழிக்கும் தன்மை ஏற்படலாம். இதனால் ஒரு சிலருக்கு வாய் ஒழுங்கற்று போய் பேச்சு சரியாக இருக்காது.

    இன்னும் சிலருக்கு ஒரு கை, ஒரு கால் செயலற்று நடக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த நிலை ஏற்பட்டால் படுத்த இடத்திலேயே முடங்கி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையான அதுவும் இலவசமான சிகிச்சை இருக்கிறது என்கிறார் டாக்டர் தீபா

    மூளை பகுதி

    மூளை பகுதி

    இதுகுறித்து அவர் கூறுகையில், மூளை பகுதிக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வரக் கூடும். இது ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் கொழுப்பு அதிகரித்தாலும், வயதாவதால் மூளைக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் ரத்த குழாய்களில் ரத்தம் உறைவதனாலும் இது போன்ற நிலை ஏற்படலாம்.

    முதுகு தண்டுவடம்

    முதுகு தண்டுவடம்

    அது போல் மூளையில் கட்டி, முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை உள்ளிட்டவைகளாலும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஹெமிப்ளீஜியா எனப்படும் ஒரு பக்கம் ஏற்படும் பக்கவாதம், இல்லாவிட்டால் பாராப்ளீஜியா எனப்படும் இரு கால்களிலும் செயலிழப்புத் தன்மை, குவாட்ப்ளீஜியா என்பது இரு கைகளும், இரு கால்களும் செயலிழக்கும் தன்மை உள்ளவர்களுக்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறோம்.

    இரு கால்கள்

    இரு கால்கள்

    இரு கால்களும் செயலற்று வந்த ஒரு நோயாளிக்கு 12 நாட்களில் சிகிச்சை அளித்துள்ளோம். அவர் மருத்துவமனைக்கு வீல்சேரில்தான் வந்தார். அவருக்கு 90 வயது இருக்கும். டிஸ்சார்ஜ் ஆகும் போது அவர் நடக்கவே தொடங்கிவிட்டார். அவரது மகன்தான் ஒவ்வொரு இடத்திற்கும் தூக்கிக் கொண்டு சிகிச்சை பெற்று செல்வார்.

    ஒரு காலில் பக்கவாதம்

    ஒரு காலில் பக்கவாதம்

    ஒரு காலில் பக்கவாதம் ஏற்பட்ட ஒருவரும் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது. அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதிலேயே அவர் வேகமாக நடக்க தொடங்கிவிட்டார். இவருக்கு தசைகளை வலுப்படுத்த சிகிச்சை அளித்தோம். நம் மருத்துவமனையில் இவர்களுக்கு அக்குபஞ்சர், அக்குபிரஷர், மசாஜ் தெரபி, யோகா பயிற்சி, தியான பயிற்சி, சுவாச பயிற்சி, உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது.

    மனஉளைச்சல்

    மனஉளைச்சல்

    இவையெல்லாம் கொடுப்பதால் மன உளைச்சலையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த முடியும். எண்ணெயால் நீவி விடுவதால் அவர்களுக்கு தசைகள் வலுவடைகிறது. நீர் சிகிச்சை , மண் சிகிச்சை கொடுக்கும் போது அவர்கள் சீக்கிரமாக எழுந்து நடப்பதற்கு உதவுகிறது. சிகிச்சை மட்டுமல்லாமல் உணவு கட்டுப்பாடும் முக்கியம்.

    உப்பு குறைந்த உணவுகள்

    உப்பு குறைந்த உணவுகள்

    உப்பு குறைந்த உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், சிறு தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சிகிச்சைகள் எல்லாம் மருத்துவமனையில் தங்கியும் எடுக்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் வீடுகளில் தங்கி, நாங்கள் சொல்லும் கால அளவுகளில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். உணவு கட்டுப்பாட்டை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்றார் தீபா.

     கை, கால்கள் அசைக்க முடிகிறது

    கை, கால்கள் அசைக்க முடிகிறது

    இதுகுறித்து இரு கால்களும் இரு கைகளும் செயலிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில் , எனக்கு கை, கால்கள் வராமல் போய்விட்டது. எங்கெங்கோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து சொன்னார். அதன்படி இங்கு ஒரு மாதம் சிகிச்சை எடுத்தேன். இப்போது கை, கால்களை அசைக்க முடிகிறது என்றார்.

    நல்ல சிகிச்சை

    நல்ல சிகிச்சை

    இதுகுறித்து நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு கால் செயலிழந்த முதியவரின் மகன் கண்ணன் கூறுகையில் அப்பாவுக்கு ஒரு கால் வராமல் நடக்கமுடியாமல் போய்விட்டது. அவரை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். தற்போது இரு வார சிகிச்சையிலேயே நன்றாக நடக்கத் தொடங்கிவிட்டார். யாருக்காவது இது போன்ற பக்கவாத பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினை இருந்தாலும் இங்கே வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+