தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம்
சென்னை: தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு சென்னை தேர்தல் அதிகாரி குமரகுருபரன் பதில் அளித்துள்ளார். "நாளை கூட்டம் நடத்துகிறோம் என ஒரு காகிதம் கொடுத்து விண்ணப்பித்தால் மட்டும் போதாது" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தவெக தலைவர் விஜய், வேட்பாளர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. விஜய் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பிபில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது தவெக.
தேர்தல் ஆணையத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அதன்படி விண்ணப்பிக்காததால் தவெக கூட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் இறுதி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். "காவல்துறை அனுமதி இல்லாத இடத்தில் எந்தக் கூட்டத்தையும் நடத்த முடியாது. அரசியல் கூட்டங்களுக்கு Suvidha இணையதளம் மூலம் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே ஆன்லைன் விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரில் மனு கொடுத்தாலும், ஆன்லைன் விண்ணப்பம்தான் அனுமதிக்கு அடிப்படையாக இருக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "நாளை கூட்டம் நடத்தப் போகிறோம் என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தால் மட்டும் அனுமதி வழங்க முடியாது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். முறையான நடைமுறைகளைப் பின்பற்றி, 48 மணி நேரத்துக்கு முன்பு Suvidha போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தவெகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன், "அனுமதி மறுக்கப்படவில்லை. முறையான ஆன்லைன் விண்ணப்பம் இல்லாததால் கூட்டத்தை நடத்த முடியவில்லை. சரியான நடைமுறையைப் பின்பற்றினால் அனுமதி கிடைக்கும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்













Click it and Unblock the Notifications