யார் கண்ணு பட்டுச்சோ.. படபடவென சரியும் ’பனையூர்’ கோட்டை! ஆனந்தை ரவுண்டு கட்டும் ஆதவ்? என்னாச்சு?
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் மாநில நிர்வாகிகளிடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா - புஸ்ஸி ஆனந்த் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தற்போது புதிய விவகாரம் விஜய்க்கு தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில், ஆனந்துக்கு எதிராக ஜானும் - ஆதவும் கிளம்பியுள்ளதால், அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் உட்கட்சி பூசல் இருப்பது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சி தொடங்கப்பட்ட 2 வருடங்களிலேயே இவ்வாறான முரண்பாடுகள் வெளிப்படையாகத் தலைகாட்டத் தொடங்கியிருப்பது தவெகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கட்சியின் நிர்வாக அமைப்பு, தலைமையை அணுகும் முறை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வருவதாகக் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜயை எளிதில் அணுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.
தவெக உட்கட்சி மோதல்
மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட விஜயை நேரில் சந்திக்க முடியாத சூழல் உள்ளதாக சிலர் கூறுகின்றனர். இதனால் கட்சிக்குள் எழும் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் புகார்கள் நேரடியாக தலைமைக்கு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சூழலில், விஜய்க்கு அடுத்த முக்கிய அதிகார மையமாக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருவதாகவும், அவரே விஜயை அணுகுவதற்கான முக்கிய வாயிலாக இருப்பதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த்
ஆனால் புஸ்ஸி ஆனந்த் மீது புகார் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் யாரிடம் தெரிவிப்பது என்பது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகள் தற்போது விஜய்க்கு புதிய தலைவலியாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனந்த் அர்ஜுனா மோதல்
இந்த நிலையில் தற்போது ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா இணைந்து புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக கட்சிக்குள் உட்கட்சி பாலிடிக்ஸ் செய்து வருவதாகவும், இது ஆனந்த் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய புஸ்ஸி ஆனந்தை கடைசி நேரத்தில் தி.நகர் தொகுதிக்குத் தள்ளிவிடும் வகையில் அரசியல் நகர்வுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமி - ஆதவ் அர்ஜுனா
இந்த முடிவுக்குப் பின்னணியில் ஜான் ஆரோக்கியசாமி - ஆதவ் அர்ஜுனா கூட்டணி இருந்ததாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ஆனந்த் மேற்கொண்ட ரகசிய சர்வேயில், சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற முடிவு வந்ததாகக் கூறப்படுகிறது. ஐடி நிறுவன ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலும், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை அமைப்புகள் வலுவாக இருப்பதாலும் அந்தத் தொகுதியை ஆனந்த் அதிகம் நம்பியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தொகுதி விவகாரம்
ஆனால் அங்கு சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணனை நிறுத்துவது நல்லது என்ற ஆலோசனையை ஜான் - ஆதவ் தரப்பு விஜயிடம் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்த் அம்பத்தூர் தொகுதியை நோக்கி வேலை செய்யத் தொடங்கினார். அங்கு பட்டியல் இன மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அங்கும் வேறு நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆலோசனைகள் வந்ததால் இறுதியில் தி.நகர் தொகுதியில் போட்டியிட ஆனந்த் முடிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி அரசியல்
இருப்பினும் தி.நகர் தொகுதியில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதும் தற்போது வெளிப்படையாக பேசப்படுகிறது. அங்கு திமுக சார்பில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ கருணாநிதி மற்றும் ராஜா அன்பழகன் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுகவின் தி-நகர் சத்யா மீண்டும் களமிறங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக கோஷ்டி அரசியல்
கட்சிக்குள் மூன்று நிர்வாகிகள் இடையே பிரச்சினை உள்ளது என்று சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் தி.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது புஸ்ஸி ஆனந்தின் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தை அவர் தலைமைக்கு தெரிவித்தார். அதன்படி தற்போது அங்கு தீவிரமாக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். தவெக-வில் எந்தவித கோஷ்டி அரசியலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் ஆனந்த் ஆதரவாளர்கள்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா












Click it and Unblock the Notifications