Exclusive: பெண்களுக்கு இலவச பஸ் பயணம் சரிதான்! ஆனால் எங்கள் வாழ்வாதாரம்?.. குமுறும் ஆட்டோ டிரைவர்கள்
சென்னை: பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது என ஆட்டோ டிரைவர்கள் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
சரியாக 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடம் அதிகரித்தன. கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றவுடன் தலைமைச் செயலகம் சென்ற அவர் போட்ட முதல் கையெழுத்தே பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம்தான்.
நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தால் இன்று ஏழை நடுத்தர மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிலும் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இந்த ஓராண்டு காலத்தில் நகர பேருந்துகளில் இலவச பயண திட்டத்தால் நிறைய பெண்கள் பயனடைகிறார்கள்.

பெண்கள்
இந்த திட்டத்தால் மாதந்தோறும் பல பெண்கள் ரூ 1000 வரை மிச்சப்படுத்துகிறார்கள். அந்த பணத்தை குடும்ப செலவிற்கு பயன்படுத்தி பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்காக காத்திருப்பு
இலவச பஸ் பயணத்தால் பெண்கள் அந்த பேருந்துக்காக காத்திருந்து ஏறி செல்கிறார்கள். முன்பு போல் ஆட்டோவிலோ ஷேர் ஆட்டோக்களிலோ ஏறுவதில்லை. இதுகுறித்து ஆட்டோ டிரைவரிடம் ஒன் இந்தியா சார்பாக பேசினோம். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தான் ஆட்டோ ஓட்டி வருகிறேன்.

பூ மார்கெட்
அதற்கு முன்னர் பூ வாங்க மார்க்கெட் வரும் பெண்கள், 3 பேர் ஏறினால் தலைக்கு ரூ 30 கொடுத்து பயணம் செய்வார்கள். ஆனால் இப்போது ரூ 10 கொடுக்க கேட்டாலும் யாரும் வருவதில்லை. நாங்கள் ப்ரீ பஸ்ஸில் போகிறோம் என்கிறார்கள். இதனால் எங்களுக்கு வருமானம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நான் ஆட்டோ ஓட்ட தொடங்கும் போது கேஸ் விலை 45 ரூபாய் இருந்தது. ஆனால் தற்போது ரூ. 73 க்கு விற்கப்படுகிறது.

வருமானம்
இதனால் மைலேஜ் குறைச்சலாக இருக்கிறது. வருமானமும் இல்லை. நான் ஓட்டுவது வாடகை ஆட்டோ, கிடைக்கும் வருமானத்தை வைத்து ஆட்டோ வாடகை, வீட்டு வாடகை, சாப்பாடு, குழந்தைகளுக்கு படிப்பு செலவையும் நாங்கள் பார்க்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது என்பதால்தான் கேஸுற்கு மாறினோம். ஆனால் அதன் விலையும் அதிகமாகத்தான் இருக்கிறது.

ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டும் கார்டு
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் நல்லது தான். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்களாகிய எங்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைத்தால் நன்றாக இருக்கும். எல்லாருக்கும் குறைக்க முடியாவிட்டாலும் ஆட்டோ டிரைவர்கள், டாக்ஸி டிரைவர்களுக்கு மட்டும் குறைக்கலாம். இதற்காக பெட்ரோல் பங்க்களில் பயன்படுத்தும்படியாக ஒரு கார்ட்டை எங்களுக்கு கொடுத்தால் அதன் மூலம் நாங்கள் ஓரளவுக்கு பயன்பெறுவோம்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும் உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்து பிரச்சினையை தீர்த்துவிடுகிறார்கள். பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை தருகிறேன் என கூறியுள்ளார். ஒவ்வொன்றாக கட்டாயம் செய்வார். அரசுக்கும் வருமானம் வர வேண்டுமே, வந்தால் நிச்சயம் செய்வார் , எல்லாமே பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். இனி மேல் தான் தெரியும் என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications