அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை!
மதுரை: பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டி.குன்னத்தூர் இல்லத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணி மையமாக, ஆர்பி உதயகுமாரின் 'அம்மா கோவில்' செயல்பட்டு வருகிறது. தேர்தல் வியூகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதுவரை 5 முறை பறக்கும் படை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சோதனை குறித்து குற்றம்சாட்டியுள்ள ஆர்பி உதயகுமார், "தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர். அம்மா கோவிலின் ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்தார்கள். ஆனால், ஒரு சிறு பொருள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனாலும், அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்குப் பயமில்லை" என்று தெரிவித்தார்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications