அதிமுக பொதுக்குழு எப்படி கூடியது? நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி.. எடப்பாடி சொன்ன பரபர விளக்கம்!
சென்னை: அதிமுக பொதுக்குழு சட்டப்படிதான் கூடியதா என்று உயர் நீதிமன்றம் நேற்றும் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று மனுதாரர் ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், இந்த பொதுக்குழு கூடியதே சட்ட விரோதமானது.
விதியை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அதேபோல் இன்னொரு மனுதாரர் அம்மான் வைரமுத்து சார்பாக இதே வாதம் வைக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி கூட்டி உள்ளனர். இதற்கு முறையாக நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை.

வழக்கு விசாரணை
15 நாட்களுக்கு முன் பொதுக்குழு நடத்த நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் விதியை பின்பற்றாமல் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஒருவேளை பொதுக்குழுவை விதிகளை மீறி கூட்டப்பட்டு இருந்தால் அது தவறு. அதற்கு ஏற்றபடி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் நேற்று இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

சரமாரி கேள்வி
அதோடு பொதுக்குழு சட்டப்படி நடந்ததா என்று எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்று நீதிபதி நேற்று குறிப்பிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று அளித்த பதிலில், பொதுக்குழு சட்டப்படிதான் கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

கோரிக்கை
அவர்கள் கோரிக்கையை ஏற்றுதான் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்காக 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சரியாக 18 நாட்களுக்கு முன்பே இதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஜூலை 1ம் தேதி அழைப்பிதழும் அனுப்பப்பட்டுவிட்டது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே அறிவித்தோம். இது டிவியிலும் காட்டப்பட்டது. அதனால் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது.

ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு ஜூலை 23ம் தேதி அங்கீகரிக்கவில்லை. இதனால் அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதன் காரணமாக மூத்த உறுப்பினர்கள் மூலம் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மெஜாரிட்டி உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில்தான் இந்த கூட்டம் கூடியது. எனவே பொதுக்குழு சட்ட ரீதியாக கூடவில்லை என்று கூற முடியாது, என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications