தமிழக பாஜக சார்பில் ஆக.29 முதல் செப்.17 வரை கபடி போட்டி- 234 தொகுதிகளிலும் வலை விரிக்கிறது!
சென்னை : தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் அடுத்த மாதம் 29-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வரை கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்றும் கூறிக்கொண்டு, அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தி, மக்கள் மனதில் இடம்பிடிக்க அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் கட்சியை வலுசேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் புதிதாக இளைஞர்களை கட்சியில் இணைப்பது, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவது உள்ளிட்டவற்றின் மூலம் தமிழகத்தல் கட்சியை வளர்க்கும் பணிகளில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 60 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட கபடி போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக, தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது:
'மோடி கபடி லீக்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கபடி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். 5 ஆயிரம் அணிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றன. 60 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிகள் தேசிய விளையாட்டு தினமான ஆக. 29-ம் தேதி தொடங்கி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி நிறைவடைய உள்ளது. இறுதிப் போட்டியை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். பரிசளிப்பு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம், 3-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதேபோல், மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சம், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 லட்சம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளதாக எஸ்.அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications