சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு ஜூன் 19ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Kodanad Murder Case: Sayan, Manoj file bail plea in HC

இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாலும், கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே துவங்கி விட்டதாலும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா பரவியது எப்படி.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விசென்னை அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா பரவியது எப்படி.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இருவரின் ஜாமீன் மனுவுக்கும் ஜூன் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

English summary
In Kodanadu Murder Case, Sayan, Manoj had filed bail plea in Madras High court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X