முடிந்தது மீன்பிடி தடை காலம்.. களைகட்டியது காசிமேடு மீன் சந்தை! ஆனாலும் அசைவ பிரியர்கள் சோகமாம்!
சென்னை: மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் பலரும் ஒரே நேரத்தில் காசிமேடு மீன் சந்தையில் குவிந்தனர்.
Recommended Video
மீன்கள் ஒரே அடியாக அழிந்துவிடக் கூடாது என்பதற்காக மீன்கள் இனப்பெருக்கம் செய்ய மீன்பிடி தடை காலம் பின்பற்றப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டு தோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் பின்பற்றப்படுகிறது.

மீன்பிடி தடை காலம்
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீன்பிடி தடை காலம் முடிந்தது. மீனவர்கள் ஏற்கனவே படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஆயுத்தமாக வைத்து இருந்தனர். மீன்பிடி தடை காலம் முடிந்த உடனேயே மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இருப்பினும், எதிப்பார்த்தை காட்டிலும் குறைவான அளவு மீன்களே வலைகளில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

காசிமேடு சந்தை
இந்தச் சூழலில் பெரிய விசைப்படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்கள் இன்று காசிமேடு மீன் ஏலம் கொடுத்திருக்கும் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது. தடை காலம் முடிவு பெற்ற முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று மீன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் காசிமேட்டில் கூடினர்

மீன்கள் இல்லை
ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை நோக்கியே அதிகப்படியான விசைப்படகுகள் கரைக்குத் திரும்பின. பெரிய அளவிலான வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் எதுவும் கிடைக்காததால் அசைவ பிரியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும் சிறிய அளவிலான மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. மீன்கள் வரத்துக் குறைவாக இருந்ததால் விலை சற்று அதிகமாகவே இருந்தது.

கூட்டம்
இருப்பினும் விலையைப் பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக காசிமேடு மீன் சந்தை மக்கள் கூட்டமாகக் காணப்பட்டது.

விலை
காசிமேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை
- வஞ்சிரம் கிலோ 1400
- வவ்வாள் கிலோ 1000 முதல் 1100வரையிலும்
- சங்கரா கிலோ 400 முதல் 800 வரையிலும்
- தோல் பாறை கிலோ 350
- நெத்திலி கிலோ 250 முதல்
- வெள்ளை ஊடான் கிலோ 150
- காரப்பொடி கிலோ 100 ரூபாய்
இறால் நண்டு போன்றவை 400 முதலும் விற்பனை செய்யப்படுகிறது.
-
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications