வேளாண் பட்ஜெட்.. நேற்று தவிழும் குழந்தை, இன்று நடக்கும் குழந்தை, நாளை ஓடும் குழந்தை.. அமைச்சர் பன்ச்
சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அனைவரையும் கவரும் வகையில் தனது உரையைத் தொடங்கினார்,
Recommended Video
தமிழ்நாட்டில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்றைய தினம் அமைச்சர் பிடிஆர் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
ஜெயக்குமார் கைது, வேலுமணி ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

வேளாண் பட்ஜெட்
அதில் பெரியார் சிந்தனைகள் 21 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் கல்லூரி படிப்பை உறுதி செய்ய நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், 2022-23 ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்,

பண்டை தமிழ் நாகரீகம்
அப்போது பேசிய அவர், "விவசாயிகள் இடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
என்றார் திருவள்ளுவர். அதேபோல பண்டை தமிழ் இலக்கியங்களில் வேளாண் குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் எண்ணற்ற கருத்துகள் உள்ளன. வேளாண்மையை மனதில் கொண்டு தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்து வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொண்டனர்.

தவிழும் குழந்தை
கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது.. இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருக்கும். அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாக உயர இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டை செயல்படுத்த வெறும் 6 மாதங்கள் மட்டுமே இருந்தன. அதிலும் கடந்த ஆண்டு ஓமிக்ரான் கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும்.

86இல் 80 திட்டங்கள்
அப்படி இருக்கும் போதும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதும் உள்ள 6 திட்டங்களும் கூட நீண்ட கால திட்டங்கள் என்பதால் திட்ட மதிப்பீடு, வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திட்டங்கள் மெல்ல வேரூன்றிய நிலையில், இந்த ஆண்டு அதைத் தழைத்து வளர வைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். வரும் ஆண்டுகளைக் கருத்தில் கொண்டும் பல திட்டங்கள் இந்த ஆண்டு திட்டத்தில் இடம்பெறும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications