சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக்

Google Oneindia Tamil News

சென்னை: இந்து என்பது ஒரு மதமே இல்லை, வாழும் முறை என்பதை திருமாவளவன் உள்ளிட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயற்கை மருத்துவம் தொடர்பான சிகிச்சை மையத் திறப்பு விழாவின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பங்கேற்று பேசியிருந்தார்.

ஆளுநரா? சனாதன காவலரா? ஆளுநர் பேச வேண்டியது சட்ட தர்மம்.. மனு தர்மம் அல்ல! வெளுத்து வாங்கிய முரசொலி! ஆளுநரா? சனாதன காவலரா? ஆளுநர் பேச வேண்டியது சட்ட தர்மம்.. மனு தர்மம் அல்ல! வெளுத்து வாங்கிய முரசொலி!

அவர் கூறுகையில் சமூக நீதி அரசியலைப் பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்குத் துணை போகும் வகையில் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என, ஏற்கனவே சீமானுக்கு சுட்டிகாட்டியுள்ளேன். மதம் வேறு, ஆன்மீகம் வேறு. மதம் நிறுவனம், ஆன்மீகம் உணர்வு. எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி, அரசியல் சனாதானவாதிகளுக்கு துணை போகிறது.

கிறிஸ்துவம்

கிறிஸ்துவம்

உலகளாவிய மதமாக கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது, இந்து மதம் உலக மதமாக மாறவில்லை ஏன்? இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்கவேண்டும். அரசியல் மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை என தொல் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

பாஜக நாராயணன் ட்வீட்

பாஜக நாராயணன் ட்வீட்

இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இஸ்லாம் வளர்ந்தது போல், கிருஸ்துவம் வளர்ந்தது போல் உலகம் முழுதும் ஹிந்து மதம் ஏன் வளரவில்லை? : திருமாவளவன் கேட்கிறார். ஹிந்து என்பது ஒரு மதமே இல்லை. வாழும் முறை. மேலும், இந்த வாழும் முறை யாரையும் கட்டாயப்படுத்தியோ, பணம் கொடுத்தோ, ஆசை காட்டியோ, ஏமாற்றியோ, மதமாற்றம் செய்வதில்லை.

அனைவரும் சமம்

அனைவரும் சமம்

அனைவரும் சமம் என்று நினைப்பதே சனாதன தர்மம் என்கிற ஹிந்து மதம். கட்டாயப்படுத்தி, ஆசை காட்டி மதம் மாற்றுபவர்களும், பணத்திற்காக விலைபோகிறவர்களுமே மதவாதிகள். அந்த மதவாதிகளுக்கு துணை செல்பவர்கள் மத வெறியர்கள். திருமாவளவனுக்கு புரிய வேண்டும் என பதில் அளித்துள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த போதிலும் பாஜக நாராயணன் திருப்பதி தற்போது விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சனாதன தர்மம்

சனாதன தர்மம்


மேலும் சனாதன தர்மம்தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி பேசியிருந்தார். இதை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ஆளுநர் 100 விழுக்காடு ஆர்எஸ்எஸ் ப்ராடக்ட். ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை அவர். ஆளுநர் பேசுவது இந்த தேசத்திற்கு நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல என எச்சரித்துள்ளார்.

English summary
BJP Vice president Narayanan Thirupathi says that Hindu is not a religion, its a practice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X