NEET EXAM: ‛நீட்’ தேதி அறிவிப்பு.. மே 3ம் தேதி தேர்வு நடைபெறும்.. இன்று முதல் மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‛நீட்' தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 3ம் தேதி ‛நீட்' தேர்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடக்கும். இந்த தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8 ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

நம் நாட்டில் மருத்துவ படிப்புகளை படிக்க ‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நம் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பிற இளநிலை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 3ல் தேர்வு
அதன்படி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு 3 மணிநேரம் நடக்கும். அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணி வரை நடக்கும்.
13 மொழிகளில் தேர்வு
இந்த தேர்வுகள் தமிழ் உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. அதன்படி அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க மார்ச் 8 கடைசி
நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8 ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். மாணவ- மாணவிகள் https://neet.nta.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.,7000, பொது - இடபிள்யூஎஸ்/ஓபிசி -என்சிஎல் பிரிவிருக்கு ரூ.1,600, எஸ்சி, எஸ்டி, பிடபிள்பிடி, 3ம் பாலினத்தவர்களுக்கு கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் தேர்வு எழுதும் அனைவருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.9,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மே 3ம் தேதி நீட் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications