Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் செய்த சம்பவம்? தூது போன "சூத்திரதாரி".. எடப்பாடி அப்படி சொன்னாரா? பட்டுனு மறுத்த "டெல்லி"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாக பல்வேறு ஊடங்கங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. ஆனால் காங்கிரஸ் தரப்பில் விசாரித்ததில்.. இரண்டு வெவ்வேறு விதமான தகவல்கள் வருகின்றன.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்த மாலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்ததாக தகவல்கள் வந்தன.

எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்த ராகுல் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவை கேட்டதாக கூறப்பட்டது.

டெல்லி

டெல்லி

குடியரசுத் தலைவர் தேர்தலில் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள். அதிகாரபூர்வமாக நீங்கள் இப்போது பாஜக கூட்டணியில் இல்லை. அதனால் எதிர்க்கட்சி வேட்பளாரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். யஷ்வந்த் சின்காவை நீங்கள் ஆதரித்தால் நன்றாக இருக்கும் என்று ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் அன்று மாலையே பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கேட்டார்.

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்கும்படி கோரிக்கை வைத்தார். அப்போதே அரசியல் வட்டாரங்களில் இது பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அதன்பின் மீண்டும் ராகுல் - எடப்பாடி ஆகியோர் நெருக்கமாக பேசியதாக கூறப்பட்டது. ஓபிஎஸ் டெல்லி பாஜகவோடு நெருக்கமாக இருக்கும் நிலையில்தான் எடப்பாடி ராகுலிடம் பேசி வருவதாக செய்திகள் வந்தன.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கி வரும் சூத்திரதாரி ஒருவர் மூலம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது. அந்த சூத்திரதாரி எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்தான் எடப்பாடி - ராகுல் இடையே இணைப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக இடையில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. பேரறிவாளன் விடுதலை முதல் விஷயம்.

அதிக இடம்

அதிக இடம்

அது போக அதிக இடங்களை திமுக ஒதுக்கவில்லை என்ற குறை காங்கிரசுக்கு உள்ளது. மேலும் லோக்சபா தேர்தலில் மம்தா தலைமையிலான மூன்றாவது அணியை திமுக ஆதரிக்குமோ என்ற சந்தேகமும் காங்கிரஸ் தரப்பிற்கு எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி அதிமுக - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்க அந்த சூத்திரதாரி முயன்றதாக செய்திகள் வந்தன. எடப்பாடியும் இதில் ராகுலுக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசியதாக கூறப்பட்டது.

Recommended Video

    அதிமுகவை வழி நடத்தும் திறன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது - மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்
    என்ன சொல்கிறார்கள்?

    என்ன சொல்கிறார்கள்?

    இந்த நிலையில்தான் அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார்கள். எடப்பாடி - ராகுல் பேசவில்லை. எடப்பாடி பாஜகவுடன் நட்பாக இருக்கிறார். நேற்று அவர் திரௌபதியை நேரடியாக ஆதரித்ததை பார்த்தீர்கள் தானே? அவர் ஏன் ராகுலுடன் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள். டெல்லி காங்கிரஸ் தரப்பும் இதை மறுத்துள்ளது.

     டெல்லி மறுப்பு

    டெல்லி மறுப்பு

    டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களிடம் இது பற்றி விசாரித்ததில்.. ராகுல் பேசியதாக பரவும் செய்திகளில் உண்மை இல்லை. ராகுல் கேரளாவில் பிசியாக இருந்தார். அவர் ஏன் அதிமுகவிடம் ஆதரவு கேட்க வேண்டும். திமுகவுடன் நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் அவருக்கு அண்ணன் போல.. அவர் ஏன் எடப்பாடியுடன் போய் பேச வேண்டும் என்று, கூறுகிறார்கள் கதர் வேட்டியினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+