சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு லட்சம்கருவிகள் வந்திருப்பதால் பரிசோதகளை அரசால் இன்னும் கூடுதலாக செய்ய முடியும் என்பதால் இனி நல்ல மாற்றம் வரும் என நம்பலாம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சோதனகளை நடத்துவதும் முக்கியம் ஆகும். கொரோனா பரவலைதடுக்க இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிக அளவு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளா, தமிழகம் ஆகியவை மருத்துவ கட்டமைப்பில் மிக வலுவாக உள்ள மாநிலங்கள் ஆகும். குறிப்பாக தமிழகம் மிக வலுவாக உள்ளது.

மதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்மதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்

தமிழகத்தில் அதிகம்

தமிழகத்தில் அதிகம்

தமிழகத்தில் தான் மிக அதிகப்படியான மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அடிப்படை மருத்துவக்கட்டமைப்பிலும் தமிழகம் ஓரளவிற்கு நல்ல நிலையில்தான் உள்ளது. இதனால் தான் கொரோனா பரவிய போதும் மிக விரைவாக சோதனைகளை தமிழகம் அதிகப்படுத்தியது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 95 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

உயிரிழப்பு குறைவு

உயிரிழப்பு குறைவு

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்திற்கு மேல் பரவி வந்த போதிலும் உயிரிழப்பு என்பது சராசரியாக 60 என்ற அளவில் தான் உள்ளது. இதேபோல் குணம் அடைவோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமாகி வருகிறது,

10 லட்சம் கருவிகள்

10 லட்சம் கருவிகள்

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு தென்கொரியாவிடம் 10லட்சம் பிசிஆர் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரியாவில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. 10 லட்சம் பிசிஆர் கருவிகளில், 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன.இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பிசிஆர் கருவிகளின் எண்ணிக்கை 6.6 லட்சம் மாக உயர்ந்துள்ளது.

பாதிப்பு குறைய வாய்ப்பு

பாதிப்பு குறைய வாய்ப்பு

எனவே இனி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

English summary
covid 19 tamil nadu : One lakh PCR test kits came from South Korea to tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X