மாவட்டத்துக்கு வர மறுத்த சி.எம்! படு அப்செட்டில் சீனியர் ! மகனுக்காக கதிகலங்கும் ... யார்'!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் சீனியர் அமைச்சர் ஒருவரின் வருத்தமும் சபதமும் கேட்பாரற்றுதான் கிடக்கிறது. இந்த நிலையில் அந்த அமைச்சர் கோட்டைக்குள் திடீரென முதல்வர் உள்ளே வரமறுத்தது இப்போது ஹாட் டாப்பிக்.
சட்டசபை தேர்தல் நடைபெற்ற தருணத்தில் வாரிசுகளுக்கு பல சீனியர்களும் சீட்டுக்காக முட்டி மோதினர். இப்படி அப்பாக்களை அலையவிட்ட வாரிசுகள், சில இடங்களில் தேறுவதே கஷ்டம் என்ற ரிப்போர்ட்டுதான் தலைமைக்குப் போனது. ஆனால் வாரிசை கரை ஏற்றிவிடுவோம் என சபதம் போட்டு கெஞ்சாத குறையாத சீட் வாங்கி கொடுத்தனர் சீனியர்கள். அப்படி சீட் வாங்கிய நிலையிலும் தேறமாட்டாரோ என்ற சந்தேகத்திலேயே கரைசேர்ந்தார் அந்த சீனியரின் வாரிசு.

இலாகா ஒதுக்கீட்டில் அப்செட்
ஆட்சி அமைந்ததும் அமைச்சரவை பதவி ஏற்றதும் முதல் அதிருப்தி குரலும் கூட அந்த 2-ம் கட்ட சீனியரிடம் இருந்துதான் வந்தது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டில் திமுக தலைமைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக கொந்தளித்தனர். அத்தனை மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைமைக்கு எதிராகவும் குமுற வைத்தனர். தமக்கு நினைத்த இலாகா கிடைக்கும்வரை.... என்றெல்லாம் சபதம் போட்டு அதன்படியே சிலவற்றை பாலோ அப் செய்தும் வருகிறார்.

வாரிசு தொகுதி நிலவரம்
என்னதான் சீனியராக இருந்தாலும் என்னதான் இருந்தாலும் இவ்வளவு பிடிவாதம் கூடாது என அவரது சகாக்களிடத்திலேயே அதிருப்தியும் இருந்து வருகிறது. இன்னொரு பக்கம், அடுத்த தேர்தலில் அவரது வாரிசு நிச்சயம் தேற சான்ஸே இல்லை; அந்த அளவுக்கு தொகுதிக்குள் சிக்கல் இருக்கிறது; அதனால் காலங்காலமாக ஜெயிச்சு வருகிற தொகுதியை வாரிசுக்கு கொடுத்துவிடலாம் என சீனியர் கால்குலேசன் போடுகிறார் என்கிற தகவலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

விசாரணையில் தீவிரம்
மேலும் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியாக அந்த சீனியர் தொடர்பான வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டு டெல்லி விசாரணை அமைப்புகள் துருவி துருவி விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. இது அந்த சீனியர் தலைக்கு மேலே தொங்குகிற கத்திதான். இதனை மேலிடத்து சீனியர்கள் சிலர், பக்கத்து மாவட்ட ஜூனியர்கள் சிலர் ரொம்பவே ரசித்தும் கொண்டிருக்கின்றனர்.

சி.எம். முடிவால் சிக்கல்?
இந்நிலையில் சீனியர் மாவட்டத்துக்கு சிஎம் வரப் போகிறார்; அதனால் பெரும் எண்ணிக்கையிலான மாஸ் காட்ட மெகா ஏற்பாடுகளை சீனியர் செய்து கொண்டிருந்தார். ஆனால் திடுதிப்பென சிஎம் புரோகிராம் கேன்சலாகிப் போனது. இதனை சீனியர் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லையாம். தந்தைக்கே இந்த கதிதான் எனில் நம்ம எதிர்காலம் என்பது வாரிசுவின் கவலை. சீனியரோ, இத்தனை காலம் உழைத்தும் நம்ம கருத்தையும் கேட்கவில்லை..நமக்கும் மரியாதையும் தரலை.. நாம இருக்கிறப்பவே இப்படின்னா நாளைக்கு வாரிசு நிலைமை என்னவாகுமோ? என ஒவ்வொரு பொழுதும் கதிலங்குகிறாராம் அந்த சீனியர்.
-
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
அமமுக களமிறங்கும் 11 தொகுதிகள் இதுதான்.. கேஎன் நேரு உள்பட 3 அமைச்சர்கள் + சீமானை எதிர்த்து போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக்












Click it and Unblock the Notifications