ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான்
சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கு பெயர் பெற்றது.. ஒரு சாதாரண மேடை பேச்சு சில நேரங்களில் பெரிய அரசியல் கணக்குகளையே மாற்றிவிடும்.. அப்படியான ஒரு சம்பவம் இப்போது சேதுச் சீமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.. ஆம், ரஞ்சனா நாச்சியார் பற்றின ஒரு தகவல் இணையத்தில் கசிந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இது உண்மையா???
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் தின விழாவில் தனது குடும்ப வாழ்க்கையை சுட்டிக்காட்டி பேசிய கருத்து சமீபத்தில் பெரிய விவாதமாக மாறியது.. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறிய சில வார்த்தைகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்டன..

ரஞ்சனா நாச்சியார்
அந்த பேச்சுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த ரஞ்சனா நாச்சியார் கடுமையான கண்டனத்தை வெளியிட்டது மேலும் கவனத்தை ஈர்த்தது.. மேடையில் விஜய் குறிப்பிட்ட "அது வொர்த் இல்லை" என்ற வார்த்தை அவரது மனைவியையோ அல்லது திருமண வாழ்க்கையையோ இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்..
ஒரு பக்கம் பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்குவதாக அறிவித்து பேசும் ஒருவர், மறுபக்கம் குடும்ப வாழ்க்கையில் பெண்களின் உரிமைகளை மதிக்காமல் இருப்பது முரண்பாடாக உள்ளது என்றும் ரஞ்சனா கூறியிருந்தார்.. மேலும், வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கொண்டாடும் விஜய், மேடையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அதற்கேற்ற ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்..
திமுகவில் இணைகிறாரா ரஞ்சனா நாச்சியார்
மற்ற குழந்தைகளுக்கு தாய்மாமனாக சீர் கொடுப்பதற்கு முன்பு, தனது சொந்த குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக முன்மாதிரியாக இருக்க வேண்டும், கட்சியில் இருப்பவர்களே தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருந்தால் அது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம் என்று ரஞ்சனா சாடியிருந்தது தமிழக மக்களின் பெரும் கவனத்தை பெற்றது..
இந்த நிலையில், ரஞ்சனா நாச்சியார் தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ளன.. இது ஒரு சாதாரண கட்சி தாவல் அல்ல, தென் மாவட்ட அரசியல் கணக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது..
ராமநாதபுரம் திமுக
ஏற்கனவே பாஜகவில் இருந்த ரஞ்சனா நாச்சியார், ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.. கடந்த மக்களவை தேர்தலின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களத்தில் செயல்பட்டார்.. ஆனால் தனது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியால் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்..
அங்கும் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற உணர்வு அவரது தரப்பில் உருவானதாக கூறப்படுகிறது.. இணைப்பு நிகழ்ச்சியில் கூட பிரதான இடம் வழங்கப்படாமல் சாதாரண தொண்டரை போலவே நடத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.. மேலும், எதிர்கால வேட்பாளர் விவாதங்களில் கூட தனது பெயர் பரிசீலிக்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன..
தவெக விஜய்
இதற்கிடையில் ஓபிஎஸ் அணியும் திமுகவுடனான கூட்டணியில் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், ரஞ்சனா நாச்சியார் ஆளுங்கட்சியில் இணையும் வாய்ப்பு குறித்து ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன..
ஒருவேளை அவர் திமுகவில் இணைந்தால், அந்த பகுதியில் அனுபவமுள்ள ஒரு பெண் அரசியல் முகத்தை கட்சி நிச்சயம் பெறும்.. ஆனால் அதே நேரத்தில் களப்பணியில் செயல்பட்ட ஒருவரை இழப்பது தவெகவிற்கு தென் மாவட்டங்களில் பின்னடைவாகவே பார்க்கப்படும்.. இது விஜய்க்கு மைனஸாகவே அமையும்..
ஆக, அரசியலில் ஒவ்வொரு நகர்வும் புதிய சமன்பாடுகளை உருவாக்கும்.. அந்த சமன்பாட்டின் அடுத்த கட்டம் எங்கே திரும்பும் என்பதே இப்போது அரசியல் வட்டாரங்களின் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications