மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்! வாய்ப்பே இல்லைங்க! கொஞ்ச நஞ்சமா பண்ணிருக்கார்? வெடிக்கும் ‘வலதுகரம்’..!
சென்னை : அதிமுகவில் தற்போது நடந்து வருவது பிளவு அல்ல சீர்திருத்த நடவடிக்கை என்றும், தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கி வரும் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ்ஸின் முன்னாள் ஆதரவாளரும், தற்போது அதிமுக எதிர்கட்சி வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளவருமான ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ்ஸின் முன்னாள் ஆதரவாளரும், தற்போது அதிமுக எதிர்கட்சி வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளவருமான ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் அதிமுகவில் மட்டுமே எளிய தொண்டனும் உயர்ந்த பதவியை அடைய முடியும் அந்த வகையில் அதிமுகவில் தற்போது நடைபெற்று வருவது ஒரு சீர்திருத்த நடவடிக்கை அதை பிளவு என்று சொல்வதே தவறு.

எடப்பாடி பழனிச்சாமி
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலேயே பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதால் இந்த முறையும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நல்லாட்சியை கொடுத்தும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனதால் உரிய நடவடிக்கை எடுக்க ஒற்றை தலைமை என்பது காலத்தின் கட்டாயம்.

ஆளுமை
ஓ.பன்னீர் செல்வத்திற்கு தலைமை பதவிக்குரிய பண்புகள் இல்லை இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள அவர் மறுப்பதால் தான் இவ்வளவு பிரச்சனையும் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களையும் கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆளுமையை நிரூபித்துள்ளார். தொண்டர்களை விட்டு விலகி வெகுதூரம் சென்று விட்ட ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கான காலம் கடந்து விட்டது.
Recommended Video

கொஞ்ச நஞ்சம் செய்யவில்லை
மேலும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு தொண்டர்கள் புனிதமாக கருதிய தலைமை அலுவலகத்திலும் உடைத்து ஆவணங்களை எடுத்துச் சென்றது என ஓ பன்னீர்செல்வம் கொஞ்ச நஞ்சம் செய்யவில்லை" எனப் பேசினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார் ஓபிஎஸ்-ன்தீவிர முன்னாள் ஆதரவாளர் என்பதும், தேனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பல்வேறு நிர்வாகிகளை நேரில் அழைத்துச் சென்று தலைமையிடம் கண்டனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி












Click it and Unblock the Notifications