செல்வமகள் சேமிப்பு திட்டம் முதல் லாபம் வரை.. 12.75 லட்சம் வரை வரி இல்லையா? பணக்காரர்களுக்கானதா பாஜக
சென்னை: உலகமே இன்று பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய குடும்பங்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, 'சேமிப்பு' என்ற பலமான விஷயத்தை கையில் எடுத்துள்ளது.. அது இன்றைய பட்ஜெட் அறிவிப்புகளிலும் தெளிவாகவே பார்க்க முடிகிறது.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
இன்றைய பட்ஜெட்டின் ஆகச்சிறந்த அம்சமாக பார்க்கப்படுவது புதிய வருமான வரி மாற்றம்தான்.. இதுவரை வரி சுமையால் தவித்த நடுத்தர குடும்பங்களுக்கு, ஒரு சூப்பர் சான்ஸ் இன்று கிடைத்துள்ளது..

1 ரூபாய் கூட கட்ட வேணாம்
வருடத்துக்கு 12.75 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் ஒரு ரூபாய் கூட வரி கட்ட தேவையில்லை என்ற அறிவிப்பு, பலரது வீட்டு பட்ஜெட்டில் மகிழ்ச்சியை விதைத்துள்ளது. அதிலும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கான நிலையான கழிவு தொகை 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது, அரசு ஊழியர்களுக்கும் தனியார் துறை பணியாளர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய போனஸ் ஆகும்...
இதன் மூலம் மக்களின் சேமிப்புத் திறன் கண்டிப்பாக அதிகரிக்கும்.. மக்கள் அந்த பணத்தை வீணாக்காமல் தங்கம், வங்கி வைப்பு நிதி அல்லது காப்பீடுகளில் முதலீடு செய்வார்கள்.. அது மீண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முதலீடாக மாறும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் ராஜதந்திரம்.
பாஜக அரசு பணக்காரர்களுக்கா?
அதாவது "பாஜக அரசு பணக்காரர்களுக்கானது" என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.. ஏனென்றால், 2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வருமான வரிச் சட்டத்திலுள்ள சிக்கல்களை நீக்கி, ஒரு சாதாரண மனிதனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மாற்றப்பட உள்ளது... இது அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை கண்டிப்பாக குறைக்கும் ஒரு பாலமாகவே பார்க்கப்படுகிறது..
அந்தவகையில், வரிச்சலுகைகள் மூலம் மக்கள் கையில் அதிகப் பணம் புழங்கச்செய்து, அதை எதிர்காலத்திற்கான முதலீடாக மாற்ற நிதியமைச்சர் இன்று வழிவகை செய்துள்ளார்...
அதேபோல கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு விதிக்கப்படும் டிசிஎஸ் வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது, நடுத்தர வர்க்க மாணவர்களின் கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்..
செல்வமகள் சேமிப்பு - ஷேர் மார்க்கெட்
மேலும், ஷேர் மார்க்கெட்டில் நிலவும் அதிர்ஷ்ட லாபத்தை, கட்டுப்படுத்த வரி உயர்த்தப்பட்டிருப்பதும், சிறு முதலீட்டாளர்களின் உழைப்பை சூதாட்டத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய விஷயமாகவே தெரிகிறது.. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சூதாட்டம் போன்றவைகளில் இழக்காமல், பாதுகாப்பான நீண்ட கால முதலீடுகளை நோக்கி திருப்புவதே இதன் நோக்கமாகும்..
அதேபோல பெண்களின் எதிர்காலத்திற்கான செல்வமகள் திட்டம் அதாவது சுகன்யா சம்ரிதி திட்டம் மற்றும் முதியோர்களுக்கான சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய உள்ளது..
வெறும் காகிதம் அல்ல - எதிர்கால சேமிப்பு திட்டம்
அந்தவகையில், இந்த பட்ஜெட் என்பது ஏதோ கணக்கு வழக்குகளை சொல்லும் வெறும் காகிதம் மட்டுமல்ல, இது நடுத்தர மக்களை நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானவர்களாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகும்.. அரசாங்கம் வரியை குறைத்துள்ளதால், மக்கள் கையில் இப்போது கூடுதல் பணம் தங்கும்... அந்தப் பணம் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும்.. நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் எளிய வழிமுறையாகும்..
நடுத்தர வர்க்கத்தினர் சிறுக சிறுக சேமிக்கும் பழக்கமே நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பதைதான் இன்றைய பட்ஜெட் மீண்டும் உறுதி செய்துள்ளது....!!!
-
எல்லாம் ஓவர்.. நெருங்கும் கிளைமேக்ஸ்.. பாஜக தலைமை மேஜர் முடிவு.. இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியல் -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications