Chandra Grahan: சென்னையில் வானில் தெரிந்த சிவப்பு நிலா.. சந்திரகிரகணம்! ரெட்மூனை கண்டு ரசித்த மக்கள்
சென்னை: நடப்பு ஆண்டின் முதல் முக்கிய வானியல் நிகழ்வாக இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சரியாக மாலை 6.20 மணியளவில் ரெட் மூன் தென்பட தொடங்கியது. சென்னையில் மாலை 6.20 மணி முதல் 6.30 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. மக்களும் மாடியின் நின்றபடி வெறும் கண்களாலேயே பார்த்து ரசித்தனர்.
இதேபோல் மும்பை, டெல்லி என நாட்டின் பல்வேறு நகரங்களில் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவினை மக்கள் கண்டு ரசித்தனர்.

முழு சந்திர கிரகணம்
நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் முக்கிய வானியல் நிகழ்வாக முழு சந்திர கிரகணம் இன்று வானில் தெரிந்தது. பூமி, சூரியன், நிலா ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அதாவது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் பூமியின் நிழல் நிலாவினை முழுமையாக மறைக்கும். அப்போது பூமி மீது விழும் சூரிய ஒளி சிதறி நிலாவில் மிளிரும். இதனால் நிலாவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். சிறிது சிறிதாக நிலவின் மீது ஒளி படும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சென்னையில் கண்டு ரசித்த மக்கள்
கால்வட்டம், அரைவட்டம் என பெரியதாக மாறி இறுதியில் முழு நிலவாக நிலா காட்சியளிக்கும். இந்த நிகழ்வானது நாடு முழுக்க இன்று மாலை 6 மணியளவில் நிகழக்கூடும் என கூறப்பட்டிருந்தது. தமிழகத்திலும் மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இதனால் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், வானியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் மாலை நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சந்திர கிரகணம் நிகழ்வதை கண்டனர். சென்னையை எடுத்துக்கொண்டால் சரியாக மாலை 6.20 மணியில் இருந்து 6.30 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
தெளிவாக தென்பட்ட ரெட் மூன்
இதனை மக்கள் வெறும் கண்களாலேயே கண்டு ரசித்தனர். ஒருசிலருக்கு முழு நிலவு மட்டுமே சிவப்பு நிறத்தில் தெரிந்ததாகவும் கூறினர். முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியவில்லை ஆனால் சிவப்பு நிலாவை காண முடிந்ததாக கூறினர்.
சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சந்திர கிரகணத்தை மக்கள் கண்டுகளித்தனர். குறிப்பாக கிழக்கு கடலோர மாவட்டங்களில் "ரெட் மூன்" தெளிவாக தென்பட்டது. வானியல் ஆர்வலர்கள் இந்த நிகழ்வை தொலைநோக்கிக் கருவிகளின் மூலம் பதிவு செய்தனர்.
இதேபோல் மும்பை, டெல்லி என நாட்டின் பல்வேறு நகரங்களில் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவினை மக்கள் கண்டு ரசித்தனர்.
-
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Chandra Grahan: மீன ராசிக்கு சந்திர கிரகணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. விபரீத மாற்றங்கள் காத்திருக்கு -
நாளை சந்திர கிரகணம்: பரிகார நட்சத்திரத்தினர் யார்?.. இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க -
Tirupati: இன்று சந்திரகிரகணம்! திருப்பதி ஏழுமலையான் கோயில் 10 மணி நேரம் மூடல்! -
லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! -
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம்













Click it and Unblock the Notifications