பாஜவுக்கு தவெக பச்சைக் கொடி! கூட்டணி கன்பாஃர்மா? ஒரே குரலாய் ஒலித்த மா.செ.க்கள்! ஆனாலும் ட்விஸ்ட்!
சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கூட்டணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து யோசிக்கும் முடிவுக்கு விஜய் வந்திருப்பதாகச் சொல்கின்றன பனையூர் வட்டாரங்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான அணியும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் காங்கிரஸ் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தது.
தமிழக வெற்றிக் கழகம்
இதனால் ஒரு கட்டத்தில் தவெக தனித்துப் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதற்காக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சி நிர்வாகிகளை விஜய் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நேர்காணல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, தேர்தலில் போட்டியிடுவதற்கான செலவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வரம்பான 40 லட்சத்தை விட பல மடங்கு அதிகமாக செலவிட வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்று கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை பல நிர்வாகிகள் சமாளிக்க முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
NDA கூட்டணி
இந்த சூழ்நிலையை தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்டச் செயலர்களின் கருத்துகளை அறிய விஜய் ஆலோசனை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஆன்லைன் மூலம் நடைபெற்ற கூட்டத்தில் 130 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் கூட்டணி முடிவு
இதையடுத்து அவர் நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு பாஜக தலைவர்களை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் யூகங்கள் மட்டுமே; கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே தொண்டர்கள் நம்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக
அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகெந்திரனும், விஜய் பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை; சிபிஐ விசாரணைக்காக மட்டுமே டெல்லி சென்றுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்பட்சத்தில் 50 தொகுதிகள் வரைவும், துணை முதல்வர் பதவியும் தவெக கேட்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தனித்துப் போட்டி
ஒருவேளை இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தவெக கோரிய அளவுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டால், அதிமுக் குறைவான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் தவெக எந்த அணியில் சேரும் என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் சில தலைவர்கள் தொடர்ந்து தனித்துப் போட்டியிட வேண்டும் என விஜய்யிடம் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
விஜய் என்ன முடிவு?
ஏற்கனவே திமுக அரசியல் எதிரி எனவும் பாஜகவை கொள்கை எதிரி எனவும் விமர்சித்து விட்டு தற்போது கூட்டணி சேர்ந்தால் அது முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறிவிடும் எனவும், இப்போது பதவிக்காக கூட்டணி சேர்ந்தால் பின் நாட்களில் நமது நம்பகத்தன்மை குறைந்து விடும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து விஜய் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் இருப்பதாக சொல்கின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
கனிமொழி சொன்ன அந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர் யார்? அமித்ஷா போஸ்டிங் தருவாராமே! மதுரையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications