• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எஸ்.வி.சேகரும்.. கெட்டுப் போன பாலும்.. மறக்க முடியாத டிவீட்.. அதிர வைத்த 2020!

|

சென்னை: இந்த வருடம் நடந்த முக்கிய சம்பவங்களை அசைபோட்டு பார்த்தால், அதில் டாப்லிஸ்ட்டில் உள்ளது எஸ்வி சேகர் வீட்டு பால் பாக்கெட் விவகாரம்தான்... கிண்டல், கேலி மற்றும் கடுமையான விமர்சனங்களை தாங்கி வந்தது இந்த சம்பவம்.

இந்த வருட ஆரம்பத்தில்இருந்தே அதிகமாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்ட நபர் எஸ்வி சேகர்.. இவர் தீவிரமான பாஜக ஆதரவாளர்.. பிரதமர் மோடியின் உண்மை விசுவாசி.

திமுக, அதிமுக என பல்வேறு தரப்பினரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்து ட்வீட் போடுபவர்.. வழக்கமாக திமுகவை சரமாரி தாக்குவது இவரது பாணி... சில சமயம் வீடியோவை பதிவிட்டும் திமுகவுக்கு டேமேஜ் செய்வார்.

ட்வீட்

ட்வீட்

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் காலையில் எஸ்வி சேகர் தன்னுடைய வீட்டுக்கு வாங்கின பால் பாக்கெட் கெட்டு போய்விட்டதாம்.. அதனால், பால் கெட்டுப் போனதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்வி சேகர் புகார் செய்ததும், பால் பாக்கெட் மாற்றி தரப்பட்டது.. 'பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார்.. தங்களுக்கு நன்றி" என்று எஸ்வி சேகர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து இது சம்பந்தமாக ட்வீட்டும் பதிவிட்டார்.

 கொரோனா பீதி

கொரோனா பீதி

இந்த ட்வீட்டை பார்த்ததும் திரும்பவும் ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்தனர்.. காரணம், எஸ்வி சேகர் பால் பாக்கெட் பற்றி புகார் சொன்னது தமிழகத்தில் கொரோனாவின் உச்சக்கட்ட பீதி காலம்.. யாருக்கு என்ன ஆகுமோ என்ற கலக்கத்தில் மக்கள் உறைந்திருந்த் நேரம்.. தங்கள் ஆட்சிக்கு எதிர்க்கட்சியினரால் ஆபத்து வந்துவிடுமோ என்று ஆளும் தரப்பும் அஞ்சும்படியான காலகட்டம்தான் அது.

கண்டனம்

கண்டனம்

இப்படி ஒரு சீரியஸ்தன்மை பற்றி தெரியாமல் எஸ்வி சேகர் ட்வீட் போட்டதும், மக்களின் உயிரை காக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கும் நிலையில் எஸ்வி சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்தியது குறித்து கண்டனங்கள் பல எழுந்தன. "கொரோனா பேரிடர் காலத்தில் செய்வதற்கு உருப்படியான ஆயிரம் வேலைகள் இருக்க, போயும் போயும் ஒரு ஒரு வீட்டுக்கு பால் சப்ளை செய்வது தான் முக்கியமா" என்று திமுகவிரும் கேள்வி எழுப்பினர்... "பொருளாதார மீட்சிக்கான வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் நிலையில், ஒரு மாநில முதலமைச்சர், திரிந்து போன ஒரு பால் விவகாரத்தில் எல்லாம் தலையிட வேண்டுமா?" என்ற கமெண்ட்களும் சரமாரி விழுந்தன.

 தேசிய கொடி

தேசிய கொடி

ஆனால், இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே அதிமுக அரசை தாறுமாறாக விமர்சிக்க தொடங்கினார் எஸ்வி சேகர்.. அதுமட்டுமல்ல, தேசிய கொடி பற்றி சர்ச்சை கருத்தை கூறியிருந்தார்.. அதாவது "தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்.. காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், அந்த களங்கமான தேசிய கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா?" என்று கேட்டிருந்தார்.

பரபரப்பு

பரபரப்பு

இதற்குதான் அமைச்சர் ஜெயக்குமார் எஸ்வி சேகருக்கு வார்னிங் தந்திருந்தார்.. மேலும் இந்த தேசிய கொடி விவகாரம் கோர்ட் வரை செல்லவும், முன் ஜாமீன் கேட்டு அங்கு ஓடினார் எஸ்வி சேகர்... ஆக, பால்பாக்கெட் சம்பவம் முதல் தேசிய கொடி சம்பவம் வரை இந்த வருடம் முழுவதும் பரபரப்புடனேயே வைத்திருந்தார் எஸ்வி சேகர்!

 
 
 
English summary
Unforgettable 2020: BJP Sve Shekhars Milk pocket complaint issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X