விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்!
சென்னை: திமுக மற்றும் விஜய் இடையிலான மறைமுக கூட்டணி இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்று கூறிய பியூஷ் கோயல், தேர்தலில் தோல்வி அடைந்த பின் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்றுவிடுவார் என்று விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அத்தனை கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சூழலில், நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை அறிமுக விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார்.
இதன் காரணமாகவே திமுக - விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார்.
ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது.
ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு












Click it and Unblock the Notifications