சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டக்குன்னு" இறங்கிட்டாரே" முருகன்.. எடப்பாடியார் ஹேப்பிதான்.. என்ன நடக்கிறது.?

எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்றார் எல்.முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்கிறது என்று அக்கட்சி தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.. இதே முருகன்தான், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என்று இத்தனை மாதமும் குழப்பி அடித்தவர்.. இப்போது ஏன் தன் முடிவை மாற்றி கொண்டுள்ளார்..?!

Recommended Video

    சேலம்: திமுக-காங். கூட்டணி உடைய வாய்ப்பு... பாஜக தலைவர் முருகன் பேட்டி!

    முதல்வர் வேட்பாளர் பிரச்சனை அதிமுகவில் பல நாள் ஓடி கொண்டிருந்தது.. ஓபிஎஸ் - இபிஎஸ் ஆளுக்கு ஒரு பக்கம் கோபித்து கொண்டு போனதையும், இவர்களை அமைச்சர்கள் தரப்பு மாறி மாறி சமாதானம் செய்ததையும் கண்டோம்.

    இறுதியில், ஓபிஎஸ் வாயாலேயே தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை எடப்பாடி அறிவிக்க செய்தார்.. அண்ணன் ஓபிஎஸ்-க்கு நன்றி என்றும் மேடையிலேயே புளங்காங்கிதம் அடைந்தார் எடப்பாடியார்.

    பழனிசாமி

    பழனிசாமி

    ஆனால், இதற்கு மறுநாளே தமிழக பாஜக பிரச்சனையை கிளப்பியது.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டோம் என்று கூறியது.. முதலில் முருகன் சொன்னார்.. பிறகு வானதி சீனிவாசன் சொன்னார்.. பிறகு குஷ்பு சொன்னார்.. இப்படி அடுத்தடுத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபடியே இருந்தனர்.

     சிடி ரவி

    சிடி ரவி

    முதல்வர் வேட்பாளரை கூட்டணிதான் முடிவு செய்யும் என்று ஒரு கட்டத்தில் ஜேபி நட்டாவும் இதையேதான் சொன்னார்.. ஆனால், சில தினங்களுக்கு முன்புகூட, கர்நாடகா, கோவை போல தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி 2021-ல் அமையும் என்று அக்கட்சியின் பொறுப்பாளர் சிடி ரவிதான் சொல்லி இருந்தார். முன்புதான், பிறகு இதே ரவிதான், முதன்முதலாக தன் கருத்தை மாற்றி கூறினார். "அதிமுக பெரும்பான்மை கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அந்த கட்சியே தீர்மானிக்கும்... அதிமுக தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை பாஜக ஏற்றுக்கொள்ளும் என்றார்.

     சோஷியல் மீடியா

    சோஷியல் மீடியா

    ஏன் எடப்பாடியாரை பாஜக ஏற்க மறுக்கிறது? என்ன காரணம்? வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக மனசில் வைத்திருக்கிறதா? இவ்வளவு நடந்தும் ஓபிஎஸ் ஏன் அமைதியாக இருக்கிறார்? என்பன போன்ற பல விவாதங்களையும், வாதங்களையும் சோஷியல் மீடியாவில் இந்த கருத்து ஏற்படுத்தியது.. ஏனென்றால், இதற்கு முன்பு முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் யாருமே இப்படி சொன்னது இல்லை.. பாஜக சொன்னதை பார்த்து, பாமகவும் பிரச்சனையை கிளப்பியது என்றாலும், பாஜக ஏன் அதிமுகவுக்கு அப்படி ஒரு அழுத்தத்தை தந்தது என்பதும் கேள்வியே!

    வேட்பாளர்

    வேட்பாளர்

    இந்நிலையில்தான், சேலத்தில் பேசிய எல்.முருகன், "எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் முடிவை பாஜகவும் ஏற்கிறது.. அதிமுக பெரிய கட்சி. அக்கட்சித் தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம்" என்றார். முருகனின் பேச்சு மிகப் பெரிய திருப்பத்தை தந்து வருகிறது.. முருகன் தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும் அளவுக்கு எடப்பாடியார் அப்படி ஒன்னும் பாஜகவுக்கு ஆதரவாக சமீக காலங்களில் செய்துவிடவில்லை, மாறாக அக்கட்சிக்குள் சசிகலா வருகையால் புயல்தான் அடித்து கொண்டிருக்கிறது.

     எல்.முருகன்

    எல்.முருகன்

    எனவே, முருகன் தன் முடிவைமாற்றி கொள்ள காரணம் எது என்று உறுதியாக தெரியவில்லை.. எதற்காக இவர் 3 மாசமாக அதிமுக தலைமையை குழப்பி மிரட்டி கொண்டிருந்தார் என்று அதுவும் தெரியவில்லை.. ஏன் இந்த ஜகா வாங்கும் நடவடிக்கை? வாஜ்பாய், அத்வானி காலத்து பாஜக என்பது சித்தாந்த ரீதியில் இருந்தது.. ஆனால், இப்போதுள்ள பாஜக ஒருவித சாதுர்ய அரசியலில் நகர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சரியான உதாரணம். அதேசமயம், எடப்பாடியாரின் இன்னொரு வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.

     பாஜக

    பாஜக

    அதிமுகவை திணற வைக்கும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்திருக்கிறதா? அந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏ, எம்பி.க்கள் இருக்கிறார்கள்? குறைந்தபட்சம் வாக்கு சதவீதத்தை அதிமுகவை விட அதிகமாக வைத்திருக்கிறதா? இப்படி எதுவுமே இல்லாமல், ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுகவை, பாஜக குழப்பியடித்ததும், இப்போது முடிவில் பின்வாங்குவதும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது..!

    English summary
    We accept Edappadi palanisamy CM candidate, says L Murugan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X