Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயபாஸ்கர் ரெய்டு.. லஞ்ச ஒழிப்புத்துறை எப்ஐஆர்.. என்னென்ன பிரிவுகளில் வழக்கு? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ரெய்டை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் ஏ 1 ஆக விஜயபாஸ்கரும், ஏ 2வாக அவரின் மனைவி ரம்யாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

2016க்கு பின் 27 கோடி ரூபாய் வரை இவர் முறைகேடாக சொத்து சேர்த்து இருக்கிறார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. 5 வருடத்தில் பல்வேறு முறைகேடான ஒப்பந்தங்கள், லஞ்சங்கள் மூலம் இவர் இந்த சொத்துகளை குவித்து இருக்கலாம் என்று எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்

வழக்கு விவரம்

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கு விவரங்கள்,

லஞ்ச ஓழிப்பு சட்டம் 1988ன் கீழ் 109 IPC r/w 13(2), 13(l)(c) பிரிவுகளில் வழக்கு.

லஞ்ச ஓழிப்பு சட்ட திருத்தம் 2018ன் கீழ் 13(2) r/w 13(l)(b), 12 r/w 13(2) r/w 13(l)(b) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏ 1 ஆக விஜயபாஸ்கரும், ஏ 2வாக அவரின் மனைவி ரம்யாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சொத்து

சொத்து

இவர் வருமானத்திற்கு புறம்பாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. லஞ்ச பணம் மூலமும், கணக்கில் காட்டப்படாத வருவாய் மூலமும் 14 கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக எப்ஐஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி காலத்தில் முறைகேடாக டிப்பர் லாரிகள், ஜேசி பி எந்திரங்கள், கலவை எந்திரங்கள், மணல் அள்ளும் சிறிய ரக லாரிகள், உபகாரணங்கள் வாங்கியதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 43 இடங்களில் ரெய்டு… மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
    பங்குகள்

    பங்குகள்

    இது போக 28 கோடி ரூபாய்க்கு நகை கடைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகள் முதலீடு செய்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் 4 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. சென்னை தி நகர் வீடு 14 கோடி ரூபாய்க்கு சட்டத்திற்கு புறம்பாக வாங்கியதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய்க்கு 85 சவரன் நகை வாங்கியதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

    பினாமி

    பினாமி

    பெரும்பாலான சொத்துக்கள் பினாமி பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவரின் தம்பி, தங்கைகள், மாமனார் வீடுகளில் கூட ரெய்டு நடந்து கொண்டு இருக்கிறது. விஜயபாஸ்கர் தனது மனைவி பெயரில்தான் கிட்டத்தட்ட 20 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் வாங்கி உள்ளார். இதனால்தான் அவரின் பெயர் ஏ2வாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+