"ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு.. வந்தா என்னவெல்லாம் செய்வாரோ?" - விஜய் மீது அப்பாவு அட்டாக்!
சென்னை: "தவெக தலைவர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்ததால் விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம், உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்யும் தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்?" என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம், ரெட்டியார்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பார்வையிட்டார்.

அப்பாவு பேட்டி
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, "முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்படுகின்றன. இந்நிலையில், நெல்லை ரெட்டியார்பட்டியில், நீர்நிலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 876 குடும்பங்களுக்கு, சுமார் ரூ.129 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 400 சதுர அடியில், சந்தை மதிப்பில் ரூ.18 லட்சம் மதிப்பிலானது'' என்றார்.
மேலும், பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தின் கடன் 5.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், நாங்கள் வாங்கிய கடன் அனைத்தும் கல்வி, மருத்துவம், மகளிருக்கு மாதம் ரூ.1000, காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்றபோது இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி அரசு வாங்கிய கடனில் ரூ.16 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளது" என குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வராமலேயே விஜய் இப்படி
மேலும் பேசிய அப்பாவு, "விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததால்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்துள்ளார், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை மக்கள் அறிவார்கள்." எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்து வருவது குறித்து பதிலளித்த அப்பாவு, "திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. தனிப்பட்ட நபர்களின் கருத்து கூட்டணியைப் பாதிக்காது. என்னுடன் இதோ காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளார், அவருக்கும் அது தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி!












Click it and Unblock the Notifications