3வது அலை எப்போது உச்சம் அடையும்? வேக்சின் எப்படி வேலை செய்கிறது? டாக்டர் ராம் கோபாலகிருஷ்ணன் பேட்டி
சென்னை: அக்டோபரில் 3வது அலை உச்சமடையும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நோய் தொற்று நிபுணர் டாக்டர் ராம் கோபாலகிருஷ்ணன் பிரபல தமிழ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கொரோனா எந்த தேதியில் உச்சமடையும் என்று சொல்ல முடியாது. ஒன்று நாங்கள் கற்றுக்கொண்ட கொரோனா பற்றி, முன்கூட்டியே கணிப்பது மிகவும் கடினம்.
ஜனவரி பிப்ரவரியில் யார் எதிர்பார்த்தார்கள் இரண்டாவது அலை வரும் என்று? அதுவும் ஏப்ரல் மே மாதங்களில் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா இந்த மாதம், இந்த வருடம், வரும் என சொல்ல முடியாது. ஆனால் மூன்றாவது அலை வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் கொரோனா மரபணுக்கள் மாறிக்கொண்டே வருகிறது.
போன வருசம் வந்தது வூகான் வைரஸ். இந்த முறை வந்தது டெல்டா வைரஸ். டெல்டா வைரஸ் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொரோனா மல்டிபில் ஆகும் போது கொஞ்சம் மாறும். மரபணு மாற்றம் அடையும்- அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். கொரோனா மரபணு மாறுவதால் இப்போது மக்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யுமா செய்யாதா அல்லது தடுப்பூசிகள் வேலை செய்யுமா செய்யாதா என்பதை சொல்ல முடியாது.

மூன்றாவது அலை வராது
இப்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள், அடுத்து வரும் கொரோனா வெர்சனுக்கு ஓரளவுக்குத்தான் வேலை செய்யும் என நிறையபேர் எதிர்பார்க்கிறார்கள். கட்டாயம் மூன்றாவது அலை வரும். எவ்வளவு தடுப்பூசி போடுகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் எல்லோருக்கும் தடுப்பூசியை கொடுத்தால் மூன்றாவது அலை 2021ல் வர வாய்ப்பு மிக குறைவு.

இன்புளுயன்ஸா
இந்தியா ஏற்கனவே முதல் அலை, 2வது அலை என இரண்டு கொரோனா அலைகளை பார்த்துள்ளது. 3வது அலை மற்ற அலைகளில் இருந்து எந்த வகையில் வித்தியாசப்படும் என்று கேட்கிறீர்கள், வைரஸ் மாறிக்கொண்டே இருக்கும். மாறிய வைரஸ்க்கு மேல் புது வேக்சின் கொண்டுவர வேண்டும். ஏனெனில் வைரஸ்கள் மாறிக்கொண்டே வரும். எப்படி இன்புளுயன்ஸா வைரஸ்க்கு ஒவ்வொரு வருடம் தடுப்பூசி போடுகிறோம். ஒவ்வொரு வருடமும் புது வேக்சின் போடுகிறோம். அதாவது போன வருடம் வந்த இன்புளுயன்ஸாவைவிட மாறி வேக்சின் போடுகிறோம். அதுகூட கொரோனாவிற்கு கொண்டுவந்தாலும், அதைவிட சிறப்பான வேக்சின் தேவை.

ஊசி வேக்சின்
தற்போது கொடுக்கும் வேக்சின் எல்லாம் ஊசி போடுவது மாதிரியான வேக்சின் ஆகும். இதேவேக்சினை மூக்கு வழியாக கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும். எந்த அளவிற்கு அறிவியலை பயன்படுத்தி வேக்சின் கொண்டுவருகிறோமோ அதுநல்லது. தற்போதைய நிலையில் வேக்சின் நல்லது. யாரு வேக்சின் போடலையோ, அவங்க கட்டாயம் வேக்சின் போடுங்க..
இந்தியாவில் தற்போது உள்ள கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் அதிகமாக இருக்கிறது. இவை மூன்றாவது அலையில் இருந்து மக்களை காக்க உதவுமா என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக தடுக்கும். தடுப்பூசி போட்டால் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் பலன் உண்டு. முதலில் நோய் பாதிப்பு வராமல் தடுப்பது, நோய் பாதிப்பு வந்தாலும் மென்மையாக இருந்துவிட்டு செல்வது, மூன்றாவது மருத்துவமனையில் சேர்வதை தடுப்பது, 4வது நோய் பாதித்தாலும் உயிரை காப்பாற்றுவது போன்ற வேலைகளை தடுப்பூசிகள் செய்யும். உயிரை காப்பாற்றவும், மருத்துவமனையில் சேர்வதை தடுப்பதற்கும் வேக்சின்கள் பக்காவாக வேலை செய்கிறது.
Recommended Video

நன்றாக வேலை செய்யும்
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரலாம் .இரண்டு மூன்று நாளில் மென்மையான பாதிப்பை கொடுத்துவிட்டு சென்றுவிடும். எனவே தடுப்பூசிகளை உயிரை காப்பாற்றும் வேக்சின் என்று நிச்சயம் சொல்லலாம். இப்போது கண்டுபிடித்துள்ள எம்ஆர்ஐ வேக்சின், டெல்டா வேரியண்டுக்கு நன்றாகவே வேலை செய்கிறது. அமெரிக்காவை போல் இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் தேவை. எல்லோருக்கும் கொண்டுவருவது நல்லது" இவ்வாறு கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications