Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காய் நகர்த்திய முக்கிய புள்ளி! என்ன திமுக சார்பாக அவர் எம்பியாகிறாரா? பரபரக்கும் அறிவாலயம்! நடக்குமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக போகும் 6 ராஜ்ய சபா இடங்களுக்கான பந்தயம் இப்போதே ஆளும் திமுக தரப்பில் தீவிரமாக நடந்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய தலைகள் இந்த பதவிக்கு அடிபோடுவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.

இந்த வருடம் ஜூலையில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் எளிதாக கைப்பற்றும்.

சட்டசபை தேர்தலில் வென்றதன் மூலம் திமுகவின் எம்பிக்கள் பலம் அதிகரிக்க உள்ளது.

காங்கிரஸ் திட்டம்

காங்கிரஸ் திட்டம்

மீதமுள்ள 1 இடத்தை திமுகவின் ஆதரவில் கைப்பற்ற காங்கிரஸ் தலைமை திட்டமிட்டிருக்கிறது. டெல்லியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க டெல்லிக்கு செல்லும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பு நடக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா இடத்தை ஒதுக்கித் தருமாறு ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கோரிக்கை வைப்பார் என சொல்லப்படுகிறது.

திமுக திட்டம் என்ன?

திமுக திட்டம் என்ன?

இதற்கான ஆலோசனைகள் இப்போதே நடந்து வருகிறதாம். இந்த நிலையில், திமுக ஜெயிக்கவிருக்கும் 4 இடங்களுக்கு பலத்த போட்டி நடக்கிறது. ஜூலையில் ராஜ்யசபா பதவி காலம் முடியும். திமுகவினர் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். நாங்கள் அவையில் நன்றாக செயல்பட்டோம். பல்வேறு முக்கிய விஷயங்களை தமிழ்நாடு சார்பாக பேசினோம். இதனால் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

வாய்ப்பு

வாய்ப்பு

நாம் ஆட்சியில் இருக்கும் நிலையில் எங்களால் இன்னும் நிறைவாய் விஷயங்களை அவையில் பேச முடியும். எனவே இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராஜ்யசபா பதவி காலம் முடியும் திமுகவினர் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனராம். இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து திமுகவுக்கு தாவி, ஐ.டி. விங்கின் துணைச் செயலாளராக இருக்கும் தொழிலதிபர் மகேந்திரன், ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற தீவிர முயற்சியில் காய்களை நகர்த்தி வருகிறார் என்று தகவல்கள் வருகின்றன.

சபரீசன்

சபரீசன்

இவருக்கான வாய்ப்பும் கொஞ்சம் அதிகம் உள்ளது. இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தல் வரும் போதெல்லாம் சபரீசன் பெயர் அடிபடுவது வழக்கமாகி விட்டது. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத அவர், பெயர், ராஜ்யசபா தேர்தல் வரும் போதெல்லாம் அடிபடுவது சகஜமாகி விட்டது. அதனால் அது ஒரு பெரிய விசயமில்லை. ஆனால், திமுக ஆட்சியில் இருப்பதால் சபரீசனுக்கு சில பொறுப்புகளை கொடுத்துள்ளார் ஸ்டாலின். கட்சியிலும் முக்கியமான சில பணிகளை சபரீசன் கவனித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

சுணக்கம்

சுணக்கம்

இப்படிப்பட்ட நிலையில் அவரை எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பினால் கொடுக்கப்பட்ட பொறுப்பில் சுணக்கம் ஏற்படலாம். அதனால் அவருக்கு இந்த முறையும் வாய்ப்பிருக்காது என்கிறார்கள் அறிவாலய தரப்பில். சபரீசன் எம்.பி. ஆவாரா ? மாட்டாரா ? என்கிற கேள்வி ஒரு பக்கம் திமுகவில் எழுந்துள்ள நிலையில், ஏற்கனவே எம்பியாக இருக்கும் சிலருக்கும் புதிதாக எம்பியாக முயலும் சிலருக்கும் இடையில் தற்போது பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+