சித்தார்த்தை ஒருமையில் பேசிய சிஆர்பிஎப் வீரர்.. அவர் தான்யா இவர்! அன்று அக்னிபாத்தை ஆதரித்தாரே
சென்னை: மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி 20 நிமிடங்கள் தன்னுடைய பெற்றோரை காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டி இருந்த நிலையில் அவரை காட்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் சி.ஆர்.பி.எஃப் வீரர் இதற்கு முன்பாக அக்னிபாத் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை ஆதரித்து வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சித்தார்த் தொடர்ந்து ட்விட்டரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவித்து வரக்கூடியவர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை அவர் வெளியிட அது அதிகளவில் பகிரப்பட்டது.
அந்த பதிவில், "மதுரை விமான நிலையத்தில் கூட்டமே இல்லாத நிலையில் எனது வயதான பெற்றோர்களை சிஆர்பிஎப் அதிகாரிகள் 20 நிமிடங்கள் நிற்க வைத்து துன்புறுத்தினார்கள். பெற்றோர் கையில் இருந்து நாணயங்களை எடுக்க சொன்னார்கள்." என்று பதிவிட்டார்.

சித்தார்த் புகார்
சிஆர்பிஎப் அதிகாரிகள் இந்தியில் பேசியதால் அவரை ஆங்கிலத்தில் பேச சொன்னபோது இந்தியாவில் இப்படிதான் இருக்கும் என்று அவர் கூறியதாகவும் குற்றம்சாட்டி உள்ள சித்தார்த், வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்றார். இந்த நிலையில் சித்தார்த்தை விமர்சித்து சிஆர்பிஎப் வீரர் என்று கூறிக்கொள்ளும் பெயர் தெரியாத நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டது இன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

சிஆர்பிஎப் வீரர் பேச்சு
அதில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் உங்கள் பெற்றோரை இந்தியில் பேச வேண்டும் என துன்புறுத்தியதாக கூறி உள்ளீர்கள். முதலில் எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு நீங்க யார்? இந்தியாவின் துணை ராணுவ படையை ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு நீ யார்? நாங்கள் என்ன பிரிட்டிஷ்காரர்களா அல்லது வெள்ளைக்காரர்களா?

இந்திய மொழியில் பேசுவோம்
இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை பேச சொல்லுங்கள் நாங்கள் பேசுவோம். அங்கே தமிழ் பேசும் அதிகாரியும் இருந்திருப்பார். அவரை அழைத்து தமிழில் பேச வைத்து இருக்கலாம். தெலுங்கு தெரியும் என்றால் தெலுங்கு மொழி பேசுபவர்கள் இருப்பார்கள். நீங்க எப்படி ஆங்கிலத்தில் பேச சொல்லலாம்? நாங்கள் என்ன வெள்ளையர்களா? வெள்ளையர்களே இங்கு வந்து இந்தி கற்கிறார்கள்.

ஒருமையில் பேச்சு
உன்னை நாங்கள் துன்புறுத்தி விட்டோமா? பெற்றோரிடம் சில்லறை இருந்தது என சொல்லி இருக்கிறீர்கள். சில்லறை காசை எந்த மொழியில் எடுங்க சொன்னார்கள்? அதை எப்படி நீ புரிஞ்சுகிட்ட? சைகை செய்தார்களா? அதை முதலில் சொல்லு. வேலையில்லாதவர்கள் துன்புறுத்துவதாக சொல்லி இருக்கிறீர்கள்.

சித்தார்த் மீது விமர்சனம்
நீ வேலையில் இருக்கியா? திரையுலகில் நீ என்னென்ன அட்டகாசம் செய்தாய் என யாருக்கும் தெரியாதா? கண்ணியமாக பேச முதலில் கற்றுக்கொள். அது அவர்கள் வேலை. அரை மணி நேரம் அல்ல.. 2 மணி நேரம் என்றாலும் நிற்க வேண்டும். சந்தேகத்தில் நிற்க சொன்னால் நின்றுதான் ஆக வேண்டும். ஒரு நிமிடம் அங்கிருந்து நகர்ந்து பார்.

அரசியல்வாதிகள் மீதும் விமர்சனம்
எதற்கெடுத்தாலும் கூழ கும்பிடு போடும் அரசியல்வாதி என்று நினைத்தாயா? சரி சார்.. ஓகே சார் சொல்வதற்க்கு. டிபார்ட்மெண்ட் பவர் என்றால் என்னவென்று முதலில் புரிந்துகொள். உங்கள் பெற்றோர் மட்டுமில்லை, வீரர்களின் பெற்றோர் வந்தாலும் கடமையை செய்வார்கள். அதேபோல், எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தி தெரியவில்லை என்று வெட்கப்பட்டு சொல்லிவிட்டு போ!

இந்தி இருக்கிறது
ஆங்கிலம் தெரியாது என்று சொல்வதற்கு நாங்கள் வெட்கப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை படிக்கும் அவசியமுமும் இல்லை. அலுவல் மொழி இந்தி இருக்கிறது. நாங்கள் அத கற்கிறோம். தமிழ் தெரியும். தெலுங்கு மக்களிடம் தெலுங்கில் பேசுவோம். மலையாளிகளிடம் மலையாளம் பேசுவோம். நீ தான் வெளியூரில் வெள்ளையர்களுடன் சுற்றுபவன். அதனால் உனக்கு தான் ஆங்கிலம் தெரிய வேண்டும். வார்த்தையை பார்த்து பயன்படுத்துங்க. ஜெய்ஹிந்த்" என்றார்.

6 மாதத்திற்கு முன் வீடியோ
இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் இவர், கடந்த ஜூன் மாதமும் இதேபோன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ராணுவ பயிற்சி பெற்ற மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதை ஆதரித்து இவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அக்னிபாத்துக்கு ஆதரவு
அதில், "நாட்டை காக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான் அக்னிபாத் திட்டமே தவிர தேச துரோகிகளுக்கு இல்லை. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் நான்கு வருடங்களுக்கு பின் தங்களது சொந்த மாநில காவல்துறையில் பணியமர்த்தப்படுவார்கள். இதனை பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தேவையில்லாமல் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.

நாட்டை பிளவுபடுத்த வேண்டாம்
அரசியலையோ மதத்தையோ கொண்டுவந்து நாட்டை பிளவுபடுத்த வேண்டாம். நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம். நாளை ஒரு பிரச்சனை வரும்போது வீட்டிற்கு ஒரு இளைஞர் சண்டைக்கு வர வேண்டும் என்று அழைத்தால் தற்போதே பணம் கொடுங்கள் போருக்கு வருகிறேன் எனச் சொல்வீர்களா? இல்லை நாட்டைக் காக்க ஓடி வருவீர்களா?

டிரெண்டான வீடியோ
உள்நாட்டு கலவரத்தை தூண்டும் நீங்கள் ராணுவத்துக்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? புரட்சி செய்யப்போகிறீர்களா? ராணுவத்துக்கு அதுபோன்றவர்கள் தேவையில்லை. எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் இளைஞர்கள் ஏன் ராணுவத்திற்கு வரவேண்டும்? மருத்துவராக பொறியாளராக ஊருக்கு போகலாமே.

ராணுவ வீரர் இப்படி பேசலாமா?
யாரையும் ராணுவத்திக்கு வந்து தான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஒரு நாளாவது ராணுவ உடையை அணிய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் வரலாம். நடிகர்கள், அரசியல்வாதிகளுக்காக தீக்குளிப்பதை விட நாட்டுக்காக உயிர்விடுவது மேல், ஜெய்ஹிந்த்." என பேசி உள்ளார். இந்த நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் இப்படி அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிடுவது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications