தகுதி இருந்தும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் சர்வதேச போட்டியில் புறக்கணிப்பு.. ஹைகோர்ட் வேதனை
சென்னை: தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை செவித்திறன் குறைப்பாடுடையோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய வீரர் வீராங்கனைகளை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்து அனுப்ப தகுதி தேர்வு வைத்தது. இந்த தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன். செவித்திறன் குறைப்பாடு உடைய இவர் தடகளட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சமீஹா பர்வீனை, இந்திய விளையாட்டு மேம்பாட்டு கழகம் புறக்கணித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஏன் புறக்கணிப்பு
100 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதலில் தேர்ச்சி பெற்றதாக சமீஹா பர்வீன் கூறுகிறார். ஒரே ஒரு பெண் தான் தேர்வாகி உள்ளதால், அவருடன் ஒரு பயிற்சியாளர் மற்றும் இரு மருத்துவர்களையும் போலந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை அழைத்து சென்றால் பொருளாதார ரீதியில் பிரச்சனை வரும் என்று புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது,

தடகளம்
இதனால் கண்ணீர் மல்க டெல்லியில் இருந்து திரும்பிய சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் செவித்திறன குறைப்பாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டது.

பெண் என்பதால் மறுப்பு
இந்த போட்டிகளில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சமீஹா பர்வின் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பங்கேற்க அனுமதிக்கவில்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், அப்போது சமீஹா பர்வின் தரப்பில், தகுதி சுற்றில் தகுதி பெற்ற வீரர்களில் தான் மட்டுமே பெண் என்பதால் போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைப்பெற உள்ள செவித்திறன் குறைப்பாடுடையோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எச்சரிக்கை
இதை பதிவு செய்த நீதிபதி, தடகள போட்டிகளில் சமீஹா பர்வின் இதுவரை பெற்றுள்ள பதக்க விவரங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்து நாளைக்குள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கை நாளைக்கு தள்ளி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications