Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கத்தை கெடுத்திருக்கிறது திருத்தணி.. தேர்தல் ஆதாயம்.. சினிமாவில் பணம் மட்டுமே என்பது.. சாபக்கேடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் அமைதியான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருத்தணியில் அண்மையில் நடந்த அதிர்ச்சி சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. இது வெறும் ஒரு குற்றச் சம்பவம் மட்டுமல்ல; நம் சமூகத்தின் ஆணிவேரை அரிக்கும் கலாச்சார மாற்றத்தின் வெளிப்பாடு. ஒருபுறம் போதைப்பொருள் புழக்கம், மறுபுறம் திரையில் காட்டப்படும் அதீத வன்முறை - இந்த இரண்டும் இணைந்து நம் இளைஞர்களை எத்தகைய பாதாளத்திற்கு இட்டுச் செல்கின்றன என்பதை நாம் உரக்கப் பேச வேண்டிய தருணம் இது.

சாதிய அடக்குமுறைகளை தெரிவிக்கும் விதமாக மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் எடுத்தார். அந்த படத்தில் வந்த ரத்தனவேல் கேரக்டரை கொண்டாடியவர்கள் மிக அதிகம். மாரி செல்வராஜூக்கே இந்த அணுகுமுறை நிச்சயம் திடுக்கிட வைத்திருக்கும்.அதுதான் இன்றைய 2 zen கிட்ஸ் சிலரின் மன நிலையாக இருக்கிறது. அதேபோல் அசுரனில் தனுஷ் படத்தில் வரும் பாடலை பயன்படுத்தி ரீல்ஸ் போட்டு கெத்து காட்டுகிறார்கள். அதேபோல் வடசென்னை படத்தில் உள்ள காட்சிகளை வைத்தும் ரீல்ஸ் போடுகிறார்கள்.. அதேபோல் தனுஷ் நடிக்கும் அரசன் படத்தின் பாடலை வைத்து கெத்து காட்டும் ரீல்ஸ் போடுகிறார்கள். அதேபோல் லியோ மற்றும் ரெட்டோ படத்தில் வந்த மாஸ் காட்சிகளையும் வைத்து ரீல்ஸ் போடுகிறார்கள்.

Thiruthani incident and crumbling future Where is cinema s culture of violence leading youth of TN


ஹீரோக்களே வன்முறையாளர்கள்

கடந்த சில ஆண்டுகளில் வன்முறை காட்சிகள் அதிகம் நிறைந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. வழக்கமாக வில்லன்களை தான் வன்முறையாளராக காட்டுவார்கள். ஆனால் ஹீரோக்களே வன்முறையை கையில் எடுக்கும் வகையில் தான் படங்கள் உள்ளன. நல்ல விஷயத்திறக்காக வன்முறையை கையில் எடுப்பதாக காட்சிகள் வைத்தாலும், வன்முறை மாஸ் என்பதை வழிந்து திணிக்கும் வகையில் பல காட்சிகளை ஹீரோக்களின் மாஸ்க்காக வைக்கிறார்கள். இதை பயன்படுத்தி தான் வன்முறை பாதையில் செல்லும் இளைஞர்கள் கெத்துக்காக ரீல்ஸ் போடுகிறார்கள்.

வன்முறை படம் வேண்டாம்

சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக வன்முறை கதைகளை அதிகம் எடுப்பது இன்றைய இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுபோன்ற கதைகளை ஹீரோக்கள், இயக்குனர்கள் கைவிட வேண்டும் என்றும், வன்முறையால் அழிந்தவர்களின் கதையை எடுப்பதாக நினைத்து, அந்த வன்முறையை எதார்த்தமாக காட்டுவதாக நினைத்து பல இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்வது என்பது தவறு என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். எனவே இன்றைய இயக்குனர்கள் பலரும் இதனை கவனிக்க வேண்டும் என்றும், ஹீரோவிற்கு மாஸ் காட்டுவதாக நினைத்து வன்முறையை வழிந்து திணிக்க வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குற்றம் செய்தால் பெயில்

அதேபோல் 17 வயது, 18 வயது சிறார்கள் எல்லாம் கஞ்சா புகைப்பதும், மது அருந்துவதும் அதிகரித்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. பல நல்ல கானா பாடல்கள் இருக்கும் நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலான வார்த்தைகளை போட்டு கானா பாடல்களை இயற்றி, அதனை பயன்படுத்தி போதையில் ரீல்ஸ் பதிவிடுகிறார்கள்.. குற்றம் செய்தால் உடனே பெயில் கிடைக்கும் என்பது தான் அவர்கள் தைரியமாக குற்ற செயல்களில் ஈடுபட காரணமாக இருக்கிறது.

இன்ஸ்டா மானிட்டரிங் கமிட்டி தேவை

அதுமட்டுமல்ல குற்றம் செய்து சிறைக்கு போவது கெத்து என்பது போல் ஊக்குவிக்கும் வகையில் சிலர் ரீல்ஸ் போடுகிறார்கள். அவர்களை ரியல் ஹீரோக்கள் போல நினைத்து பின்பற்றுகிறார்கள் பல இளைஞர்கள்.. அப்படிப்பட்டவர்களின் பேஜ்க்ளை உடனே பிளாக் செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பாடும் கானா பாடகர்களை எச்சரிக்க வேண்டும். அதேபோல் இன்ஸ்டாகிராமில் மானிட்டரிங் கமிட்டி அமைத்து தவறான பாதையில் செல்வோரை கண்டுபிடித்து தூக்க வேண்டும்.

தேசத்திற்கே சாபக்கேடு

அதேபோல 10மணிக்கு மேல் பாரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். அதேபோல் கஞ்சா வரும் வழிகள் அத்தனையையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.. வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுப்பதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக யோசித்து இதனை உண்மையான அக்கறையுடன் தடுக்க வேண்டும்.. அப்படி செய்யாமல் அரசியல் பின்புலத்தில் குற்றம் செய்பவர்கள் தப்பிக்க முடியும்.. ஆனால் சில நாளில பெயிலில் வர முடியும் என்கிற நிலை வருமேயோனால் அது உண்மையில் இந்த தேசத்திற்கே சாபக்கேடு.

அரசியல்வாதிகளுக்கு.. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக போதைப்பொருள் விநியோகிப்பது மற்றும் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது தேசத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்..

சினிமாக்காரர்களுக்கு.. சினிமாவில் "போதை" ஒரு கொண்டாட்டமாக மாற்றப்படக்கூடாது. "பணம் சம்பாதிப்பதை விட சமூகப் பொறுப்பு முக்கியம்" என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் பணம் சம்பாதிக்க இளைஞர்களை தவறான வழிக்கு போக வைக்க வேண்டாம்..

பணமும் அதிகாரமும் மட்டுமே குறிக்கோள் என்றால், நாம் எதிர்கால சந்ததியினருக்கு எத்தகைய தேசத்தை விட்டுச் செல்லப் போகிறோம்? மாற்றத்திற்கான விதை சினிமா கலைஞர்களிடமும், அரசியல் தலைவர்களிடமுமே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+