பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. விஜய் அரசியலில் அடுத்த அதிர்ச்சி திருப்பம்
கோவை: தவெக தலைவர் விஜய் அதிக இடங்களை வென்றால் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்போம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று இந்த பரபரப்பு கருத்தை அவர் முன்வைத்துள்ளார். தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கத் தயார் என்பதே இந்த அறிவிப்பின் பின்னணியாகும்.. இந்த பேச்சால் "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்க, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்திய குடியரசு கட்சியின் (ஆர்பிஐ-ஏ) தேசிய தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, கோவை மாநகரில் நடைபெற்ற செய்தியாளளை சந்தித்து பேசினார்.

அப்போது "எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தவெக தலைவர் விஜய் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்கிறார். இப்போது அவரோடு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒருவேளை விஜய் அதிக இடங்களை கைப்பற்றினால், ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால் அவரை நாடுவோம்.
தவெக தலைவர் விஜய்
விஜய் அதிக வாக்குகளை பெறுவார் என்பதால் அவர் திமுகவுக்கு பெரிய சவாலாக இருப்பார். எங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா டாக்டர் அம்பேத்கரின் இந்து வாரிசுரிமை சட்ட கனவை நனவாக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை.
வரும் காலங்களில் தொகுதி மறுவரையறைக்கு பிறகு மக்களவையின் மொத்த இடங்கள் 816 ஆக உயரக்கூடும். அதில் பெண்கள் 273 இடங்களில் அமர்ந்து சாதனை படைப்பார்கள். இந்த இடஒதுக்கீடு 2029 நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கூட்டணியில் 18 இடங்களில் இந்தியக் குடியரசுக் கட்சி "நட்பு ரீதியான" போட்டியில் ஈடுபடும்" என்று தெரிவித்துள்ளார்,
ராமதாஸ் அத்வாலே
இப்போதைக்கு விஜய்யுடன் எந்தவித அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் விஜய்யுடன் கைகோர்க்கத் தயார் என்கிற மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
இதே கருத்தை சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியிலும் அவர் பதிவு செய்திருந்தார்.. தமிழகத்தில் ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலை ஏற்பட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணி விஜய்யுடன் பேசி ஒரு நிலையான ஆட்சியை அமைக்கும் என்று அவர் கூறியிருப்பது, பாஜக தலைமையிலான கூட்டணியின் எதிர்காலத் திட்டத்தையே வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளதால், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சை மிகக் கடுமையாகக் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
பூனைக்குட்டி மெல்ல வந்துருச்சு
ஆரம்பத்திலிருந்தே நடிகர் விஜய், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைத் தீவிரமாக விமர்சிக்காமல் மவுன காத்து வருவதை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், அவர் இக்கட்சிகளின் B-Team ஆகச் செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இப்போது மத்திய அமைச்சரே தாமாக முன்வந்து "விஜய் ஆதரவு கேட்போம்" என்று சொல்வது, திரைமறைவில் ஏதோ ஒரு புரிந்துணர்வு இருப்பதை உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். ஒருவேளை பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியே வருகிறதோ? என்றும் சோஷியல் மீடியாவிலும், அரசியல் மேடைகளிலும் அவர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
ஆனால், தவெக தரப்பை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் மிகவும் உறுதியான ஒரு நிலைப்பாடு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் பாஜக உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும், யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் விஜய் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் பக்கம் சாய்கிறாரா
தனித்து நின்று களம் காணத் தயாராகி வரும் வேளையில், மத்திய அமைச்சர் அத்வாலேவின் தொடர்ச்சியான இத்தகைய கருத்துகள் தவெக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமா அல்லது கட்சியின் செல்வாக்கை பாஜக பக்கம் சாய்க்கும் முயற்சியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒருபுறம் விஜய் தனது கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி வரும் நிலையில், மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அவரை நோக்கி நேசக்கரம் நீட்டுவது தமிழக அரசியலை ஒரு சஸ்பென்ஸான கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளது. பூனைக்குட்டி வெளியே வருகிறதா அல்லது இது வெறும் அரசியல் யூகமா? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
குறுக்கே பேசிய நபர்.. மைக் வேற வேலை செய்யல.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் டென்ஷன் ஆன விந்தியா -
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது? -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
இந்த முறை ஸ்டாலின் டார்கெட் அல்ல.. உதயநிதி... சேப்பாக்கத்தில் என்ன நடக்கிறது? -
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்! -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
கோபத்தில் தொண்டரை கன்னத்தில் அறைந்த திருமாவளவன்.. தேனியில் பரபரப்பு.. நடந்தது என்ன? -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்!












Click it and Unblock the Notifications