யார் கூட செல்பி.. மனைவி கழுத்தில் கத்தியால் குத்திய போதை கணவர்...மயங்கி விழுந்த மகள்
கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை: கல்யாண வீட்டில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கத்தியால் குத்தி மனைவியை காயப்படுத்திய நபரின் பெயர் எட்வர்ட் ஜான் என்பதாகும். இவர் கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கிரேஸ் பியூலா. தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
எட்வர்ட் ஜான் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எப்போதும் போதையிலேயே இருப்பாராம் எட்வர்ட் ஜான். கடந்த 6ஆம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது.

செல்பி எடுத்த பெண்
அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் கோபமடைந்து சண்டை போட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்கு சென்று விட்டாராம்.

போதையில் சண்டை
இரவு தனது வீட்டிற்கு வந்துள்ளார் கிரேஸ் பியூலா அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார்.மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் குத்தியுள்ளார்.

ரத்தம் சொட்டச் சொட்ட
பியூலாவின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை கண்ட அவரது மகள் பயத்தில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. ரத்தம் சொட்டச்சொட்ட அலறிய கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் தகவலை கூறினார்.

கணவர் கைது
அங்கு வந்த தாயார், உடனடியாக கிரேஸ் பியூலாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். இதுகுறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவி மீது சந்தேகப்பட்டு கழுத்தில் குத்தி காயப்படுத்திய எட்வர்ட் ஜான் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications