எமனுக்கே டாடா.. பொள்ளாச்சியில் இறந்த முதியவர் உயிருடன் வந்த அதிசயம்.. இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்
கோவை: ஜனனமும், மரணமும் இயற்கையானது. பிறப்பை வரவேற்பதும் இறப்பில் சோகமாவதும் இயல்புதான். பொதுவாக ஒருவர் உயிரிழந்தால், இனி உங்களை எப்போது பார்ப்போம், எப்படி பேசுவோம் என உறவுகள் கதறி அழுவார்கள். பொள்ளாச்சியில் உயிரிழந்த முதியவருக்கு உறவினர்கள் இறுதி சடங்கு நடத்தியுள்ளனர். திடீர் திருப்பமாக அவர் உயிருடன் வந்ததால் அவரின் உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (63). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். இதையடுத்து மருதமுத்துவின் மகன் காளிதாஸ். கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் [Pollachi Death].

உறுதி செய்த மகன்கள்
இதனிடையே தென்சங்கம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே ஒருவர் மயங்கியுள்ளார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர்.
காவல்துறையினர் சந்தேகமடைந்து காளிதாஸை தொடர்பு கொண்டு, இது உங்கள் அப்பாவா என்று அடையாளம் காட்ட சொல்லியுள்ளனர். இதற்காக கோவை அரசு மருத்துவமனை சென்ற காளிதாஸ் சடலத்தை பார்த்து, இது தன் அப்பா மருதமுத்து என்று உறுதி செய்தார். சடலத்தை பார்த்து கதறி அழுத காளிதாஸ், இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இறுதி சடங்கில் டிவிஸ்ட்
கோவை அரசு மருத்துவமனையில் சடலத்தை பெற்று கொண்டு, அவர்களின் கிராமத்தில் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சடலத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தி இறுதி சடங்குகள் செய்து வந்துள்ளனர். அப்போதுதான் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்ததாக கூறப்பட்ட மருதமுத்து சமத்துார் அருகே நடந்து சென்றதை அவரின் உறவினர்கள் சிலர் பார்த்துள்ளனர்.
இதை வீடியோ எடுத்து காளிதாஸ்க்கு அனுப்பியுள்ளனர். அதிர்ச்சியடைந்த காளிதாஸ் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்கை நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று கூறியுள்ளர். காவல்துறை விசாரித்தபோது மருதமுத்து உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருதமுத்து உயிருடன் வந்ததால் உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
காவல்துறை விளக்கம்
இதுகுறித்து கோடூர் காவல்துறையினர் கூறுகையில், "மருதமுத்துவும் 2 நாட்களுக்கு முன்பு பெத்தநாயக்கனூர் அருகே மயங்கி விழுந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். 108 குழுவினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதேபோல மற்றொருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த இரண்டு நபர்களின் உருவமும் ஒத்துப்போனது. அதனால் இறந்தது மருதமுத்துவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. மருதமுத்துவின் மகன்களே இது எங்கள் அப்பா தான் என்று உறுதி செய்தனர். அவர்களே சொல்லும்போது நாங்கள் என்ன செய்ய முடியும். இருவரின் உருவமும் ஒத்து போனதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் காவல்துறை மீது தவறு இல்லை" என்றனர்.
உறவுகள் மகிழ்ச்சி
இறந்த நபரின் சடலம் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சடலம் யாருடையது என்று கண்டறியும் பணி நடந்து வருகிறது. இறுதி சடங்குக்காக பல ஆயிரங்கள் செலவு செய்து சோகத்தில் ஆழ்ந்த மருதமுத்து குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியாகியுள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications